குழந்தையை பாசமாக கொஞ்சும் பூனைக்குட்டியின் க்யூட் வீடியோ!

பூனைக்குட்டி ஒன்று ஒரு குழந்தையை அதன் மீது படுக்க வைத்துக்கொண்டு கொஞ்சும் காட்சி இணையாத்தில் பலரை கவர்ந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 13, 2022, 04:42 PM IST
  • பூனையுடன் விளையாடும் குழந்தை.
  • குழந்தையை பாசமாக கொஞ்சும் பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
குழந்தையை பாசமாக கொஞ்சும் பூனைக்குட்டியின் க்யூட் வீடியோ! title=

குழந்தைகள் அதன் பெற்றோரிடம் எந்தளவிற்கு பாசமாக இருக்குமோ அதேபோல அவை அதன் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளிடமும் பாசமாக இருக்கும்.  பெரும்பாலும் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள் தான் வளர்ப்பு பிராணிகளிடம் ஒட்டிக்கொள்ளும், அவற்றிற்கு அது ஒரு பொம்மை போல.  அதேபோல விலங்குகளும், குழந்தைகளிடம் பாசமாக இருக்கின்றன.  விலங்குகள் மற்றும் குழந்தை இடையேயான இதுபோன்ற பாசப்பிணைப்பு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  நாம் அன்றாடம் இணையத்தளங்களில் காணும் பல கண்கவர் காட்சிகள் மனதுக்கு இதமளிக்கும் வகையில் அமைந்துள்ளது, அதிலும் குறிப்பாக இதுபோன்ற காட்சிகள் மென்மேலும் இதயங்களை இலகுவாக்குகிறது.

cat

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், ஒரு தரையில் சாம்பல் மற்றும் வெண்மை நிறம் கலந்த படுத்துக்கொண்டு இருக்கிறது, அந்த பூனையின் மீது ஒரு குழந்தையும் படுத்து இருப்பதை காண முடிகிறது.  பின்னர் அந்த குழந்தை பூனைக்கு முத்தம் கொடுத்துவிட்டு பூனையின் மீது படுத்து கொள்கிறது, பின்னர் அந்த பூனையும் அந்த குழந்தையின் தலையை மெதுவாக வருடி முத்தம் கொடுக்கிறது.  இந்த காட்சி பூனைக்கும், குழந்தைக்கும் இடையேயான ஒரு பாசப்பிணைப்பை காட்டுகிறது.

 

இந்த அழகான வீடியோவை இணையத்தில் பதிவேற்றியதும் பல்லாயிரக்கணக்கான இணையாவசிகள் கண்டு ரசித்துள்ளனர்.  அதோடு இந்த வீடியோவிற்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பலவிதமான கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.  இந்த வீடியோவுடன் கேப்ஷனாக 'பூனை குழந்தையை மிகவும் நேசிக்கிறது' என்கிற வரியும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: சேவல் முதுகில் ஒய்யாரமாக சவாரி செய்யும் பூனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News