பெண்ணுக்கு கிஸ் கொடுத்து லூட்டி அடிக்கும் சிம்பன்சி: வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Chimpanzee Video: ஒரு சிம்பன்சி பெண் சுற்றுலாப் பயணியை முத்தமிட்டு அவருடன் விளையாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது. இது காண்பவர்களை அதிசயிக்க வைக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2023, 01:40 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் radhikavv_singh என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு இதுவரை 14.4 மில்லியன் வியூஸ்களும் 933k லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
பெண்ணுக்கு கிஸ் கொடுத்து லூட்டி அடிக்கும் சிம்பன்சி: வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சிம்பன்சிகள் தங்கள் வேடிக்கையான மற்றும் ஜாலியான இயல்புக்கு பெயர் பெற்றவை. இவற்றின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. இவற்றின் வேடிக்கையான அசைவுகளையும் இவை செய்யும் அட்டகாசங்களையும் காண்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போதும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. 

ஒரு சிம்பன்சி பெண் சுற்றுலாப் பயணியை முத்தமிட்டு அவருடன் விளையாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது. இது காண்பவர்களை அதிசயிக்க வைக்கிறது. 

வண்ணமயமான பேன்ட் அணிந்துள்ள ஒரு குறும்புக்கார சிம்பன்ஸி, ஒரு பெண் சுற்றுலாப் பயணியுடன் விளையாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த பெண்ணும் சிம்பன்சியும் ஊஞ்சலில் அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். தன் குறும்புக்கார குணத்தை காட்டும் வகையில், அது அந்த பெண்ணுடன் பல போஸ்களில் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றது. அந்த பெண்ணுடன் மிகவும் விளையாட்டுத்தனமாக அது நடந்துகொள்கிறது. பெண்ணின் முகத்தை தடவும் சிம்பன்சி, அவருக்கு கை கொடுக்கிறது. பின், அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் அவருக்கு முத்தம் கொடுக்கிறது. 

மேலும் படிக்க | ’நடிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம்’ சிறுத்தையை முட்டாளாக்கிய வாத்துவின் பலே நடிப்பு - வைரல் வீடியோ

இது போதாதென்று சிறிது நேரம் கழித்து, அந்த சிம்பன்சி குறும்பின் உச்சத்திற்கே செல்கிறது. சிம்பன்சி பெண்ணின் மடியில் சென்று ஒய்யாரமாக அமர்ந்துகொள்கிறது. கடைசியாக சிம்பன்சி அந்தப் பெண்ணின் தோளில் ஏறி கேமராவுக்கு கூலாக போஸ் கொடுக்கிறது.

பெண்ணுடன் லூட்டி அடிக்கும் சிம்பன்சியை இந்த வீடியோவில் காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் radhikavv_singh என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை 14.4 மில்லியன் வியூஸ்களும் 933k லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

சில நாட்களுக்கு முன்னர் வைரல் ஆன மற்றொரு சிம்பன்சி வீடியோ:

சிறைபிடிக்கப்பட்டு மிருக காட்சி சாலைகளில் இருக்கும் விலங்குகளை பற்றி நினைத்தால் நம்மில் பலருக்கு பாவமாக இருக்கும். ஆனால், அப்படி ஒரு மிருகக்காட்சி சாலையில் படு கூலாக தனது வாழ்கையை கழித்துக்கொண்டிருக்கும் ஒரு சிம்பன்சியின் வீடியோ தற்போது வைரல் ஆனது. 

லிம்பானி என்று பெயரிடப்பட்ட இந்த சிம்பன்சி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம். இதற்கு 700k இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமியில் உள்ள விலங்கியல் வனவிலங்கு அறக்கட்டளையில் (ZWF) இந்த கியூட்டான சிம்பன்சி வாழ்கிறது. இந்த சிம்பன்சி உலகம் முழுவதும் உள்ள விலங்கு பிரியர்களின் இதயங்களை வென்றுள்ளது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Limbani (@limbanizwf)

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மணமகனை கட்டிக்கொண்டு கிஸ் கொடுத்த பெண், ஷாக்கில் மணமகள்: காத்திருந்த ட்விஸ்ட், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News