Viral Video: செம ஜாலியாக குத்தாட்டம் போட்ட பள்ளி மாணவன்! குதூகலத்தில் குட்டீஸ்!

Viral Video: பள்ளி விழாவில் சிறுவன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த சிறுவனின் நடனத்தை கண்டு அனைவரும் வாயடைத்துப் போய்விட்டனர். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 15, 2023, 07:33 PM IST
  • இந்த வீடியோ ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
  • இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
  • இந்த பாடலும் ஏற்கெனவே டிரெண்டிங்கில் உள்ளது.
Viral Video: செம ஜாலியாக குத்தாட்டம் போட்ட பள்ளி மாணவன்! குதூகலத்தில் குட்டீஸ்! title=

Viral Video: நாம் படித்த பள்ளி ஆண்டு விழாக்களிலும், நமது பகுதியில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள், ஊர் திருவிழாக்களில் நடத்தப்படும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நிகழ்வில் நீங்கள் பாட்டு பாடியிருப்பீர்கள் அல்லது நடனமாவது ஆடியிருப்பீர்கள். 

ஏனென்றால், நாம் எல்லோருமே நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் அதிகம் ஆர்வமாக இருப்போம். வீட்டில் பெற்றொர்கள், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் கூட உங்களின் ஆர்வத்திற்கு சில உதவிகளையும் செய்திருப்பார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன் அதனை வீடியோ எடுப்பது என்பது அதிகம் செலவை உருவாக்கும் ஒன்றாக இருந்தது.

தருணங்களை படம் பிடியுங்கள்

ஆனால், தற்போதைய ஸ்மார்ட்போன் யுகத்தில் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தை உங்களால் சேமித்துக்கொள்ள முடியும் என்றபோது, ஒருவர் பிறந்த கணம் முதல் வாழ்வின் அத்தனை சிறப்பான தருணங்களையும் வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்துக்கொள்ள முடிகிறது. இப்போது வீடியோ எடுப்பது மட்டுமின்றி அதனை தங்களின் சமூக வலைதலங்களில் பதிவேற்றி தங்களின் இணைய சுற்றத்தாருக்கும் பகிர்ந்துகொள்கின்றனர்.

மேலும் படிக்க | குட்டி நாகத்தை ‘லபக்’கென விழுங்கிய ராஜ நாகம்..! வைரலாகும் ‘திக் திக்’ வீடியோ..!

அசத்தல் சிறுவன்

அந்த வகையில், தனது பள்ளியின் ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் போது நேபாளி பாடலான 'பாதல் பர்சா பிஜூலி'க்கு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்த இளம் பள்ளி மாணவனின் க்யூட் வீடியோ தற்போது அதிகம் பார்வையாளர்களை கவர்ந்தது. ஸ்ரீஜிதா டே என்ற இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அந்த நேபாளி பாடலுக்கு, அந்த சிறுவனின் உற்சாகமும் அபிமான நடனமும் பார்வையாளர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. சிறு வயதாக இருந்தபோதிலும், அவனின் தன்னம்பிக்கை மற்றும் மேடை தயக்கம் எதுவும் இன்றி தனது திறனை வெளிப்படுத்தினார். அதில் கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்தார்.

பலர் அவரை ஒரு எதிர்கால நடன கலைஞர் எனவும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவரது வளரும் திறமையை வளர்த்ததற்காக அவரது ஆசிரியர்களும் வழிகாட்டிகளும் பாராட்டுகளைப் பெற்றனர். இந்த வீடியோ 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுவிட்டது. ஏராளமான கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. 

சிறுவனின் தன்னம்பிக்கை உண்மையில் எப்படி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். அவரது திறமையை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், நடன பயிற்சியில் சேர்க்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனந்த கார்க்கி மற்றும் பிரஷ்னா ஷக்யா பாடிய ‘பாதல் பர்சா பிஜூலி’ பாடல் இணையத்தில் ஏற்கெனவே டிரெண்ட் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வைத்து ஏற்கெனவே, இன்ஸ்டாகிராமில் பல்வேறு ரீல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த பாடலுக்கு இந்த சிறுவன் நடனமாடியது மேலும் அந்த பாடலை வைரலாக்கி உள்ளது.

மேலும் படிக்க | பக்காவா பாத்திரம் தேய்க்கும் குரங்கு: பாத்தா பாத்துகுட்டே இருப்பீங்க.. வேற லெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News