டக் தே சூறாவளி கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகபட்ச எச்சரிக்கை நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வைக்கப்பட்டுள்ளன. புயலின் காரணமாக 14 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரேபிய கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான டவ்-தே புயல், பின்னர் வலுப் பெற்று கர்நாடகா, கோவா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக குஜராத் கடற்கரையில் இன்னும் வலுப்பெற்று நிலை கொண்டது.
கடுமையான சூறாவளியான Tauktae புயலில், இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும், 5,600 படகுகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது
அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (மே 15) 'டவ் தே' புயலாக வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அடைமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.