பாம்பெல்லாம் எனக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி: மாஸ் கட்டும் வாத்து, அதிர்ந்துபோன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Animal Viral Video: பாம்பென்றால் அனைவருக்கும் பயம்தான், ஆனால் இந்த வாத்துக்கு பாம்பெல்லாம் பஞ்சுமிட்டாய் மாதிரியாம். இதன் ஸ்டைல் இணையத்தை கலக்கி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 25, 2023, 03:27 PM IST
  • இந்த வீடியோவில் ஒரு வாத்து காணப்படுகிறது.
  • அதன் வாயிலிருந்து ஒரு பாம்பு தொங்கியபடி உள்ளது.
  • வாத்து நூடுல்ஸ் போல அந்த பாம்பை விழுங்குவதை வீடியோவில் காண முடிகின்றது.
பாம்பெல்லாம் எனக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி: மாஸ் கட்டும் வாத்து, அதிர்ந்துபோன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பூமியில் காணப்படும் கொடிய உயிரினங்களில் பாம்புகளும் அடங்கும். அது தனது விஷத்தால், பிற விலங்குகள், மனிதர்கள் என அனைவரையும் கொல்லக்கூடிய திறன் கொண்டது. பொதுவாக மனிதர்கள் மட்டுமல்லாமல், பிற விலங்குகள் மற்றும் பறவைகளும் பாம்புகளை பார்த்தால் அங்கிருந்து விலகிச்செல்லத்தான் ஆசைப்படுகின்றன. பாம்புகள் விஷ ஜந்துக்களாக இருப்பதால், அவற்றை எதிர்கொள்ளவோ ​​அல்லது கொல்லவோ யாருக்கும் தைரியம் இருப்பதில்லை. பாம்புகள் பற்றிய பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

சமீபத்தில் ஒரு ஆச்சரியமான வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு வாத்து ஒரு பாம்புடன் சண்டையிட்டு அதை தனக்கு இரையாக்குவதை காண முடிகின்றது. இந்த காட்சியைப் பார்த்த பயனர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. பல பயனர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | வேகமாக கொத்த வந்த பாம்பை புரூஸ்லிபோல் புரட்டி எடுத்த பூனை: வைரல் வீடியோ 

இந்த வீடியோவில், ஒரு தண்ணீர் குளம் அருகே பாம்புக்கு பயந்து ஓடுவதற்கு பதிலாக, வாத்து ஒன்று அதை பூச்சி போல் கொன்று தின்பதை காண்கிறோம். இது நம்மை வெகுவாக வியக்க வைக்கும் வகையில் உள்ளது.

நூடுல்ஸ் போல பாம்பை விழுங்கும் வாத்து

இந்த வீடியோவில் ஒரு வாத்து காணப்படுகிறது. அதன் வாயிலிருந்து ஒரு பாம்பு தொங்கியபடி உள்ளது. வாத்து நூடுல்ஸ் போல அந்த பாம்பை விழுங்குவதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த வீடியோவில் வாத்து பாம்பை உயிருடன் விழுங்குவது போல் தெரிகிறது. பாம்பின் வாலிலிருந்து தொடங்கி, வாத்து சிறிது சிறிதாக பாம்பின் முழு உடலையும் உட்கொள்கிறது. 

பாம்பை அசால்டாய் சாப்பிடும் வாத்தின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

பயனர்கள் அதிர்ச்சி

வைரலான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் beautiful_new_pix என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவைப் பார்த்த பல பயனர்களால் தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை. பயனர்கள் இந்த வீடியோவை லூப்பில் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு 3 லட்சம் வியூஸ்களும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | பாடாய் படுத்தும் குட்டி குரங்கு, அடித்து இழுக்கும் அம்மா குரங்கு: கியூட் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News