'எனக்கு கொஞ்சம் X Ray எடுங்க': சூப்பர் யானை, வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Viral Video: வீடியோ தொடங்கும் போது, ​​யானை பணிவுடன் ஆய்வகத்திற்குள் நுழைவதை காண முடிகின்றது. யானை மனிதர்களைப் போல மருத்துவ சோதனைக்காக தரையில் அமர்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 8, 2022, 10:05 PM IST
  • இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன.
  • இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
  • இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.
'எனக்கு கொஞ்சம் X Ray எடுங்க': சூப்பர் யானை, வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

மருத்துவர்களின் பணி மிகவும் கடினமானது. நோயை சரியாகக் கண்டறிவது, அடம்பிடிக்கும் நோயாளிகளைக் கையாள்வது, அவர்களை குணப்படுத்துவது என இவை அனைத்தும் எளிதான பணிகள் அல்ல. விலங்குகளைப் பராமரிக்கும் மருத்துவர்களைப் பொறுத்தவரை, வேலை இன்னும் சவாலானது. சிறிய செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு கால்நடை மருத்துவர்கள் வேடிக்கையான வழிகளைக் கையாளும் வீடியோக்களை இணையத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். 

ஆனால் மனிதர்களே வெட்கும் அளவுக்கு பொறுமையாக சிகிச்சை செய்துகொள்ளும் மிருகத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்றால் இந்த வீடியோவில் நீங்கள் அதை காண்பீர்கள். 

காவேரி என்பவர் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், யானைக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது. வீடியோ தொடங்கும் போது, ​​யானை பணிவுடன் ஆய்வகத்திற்குள் நுழைவதை காண முடிகின்றது. இது ஒரு மனிதனைப் போல மருத்துவ சோதனைக்காக தரையில் அமர்கிறது. 

மேலும் படிக்க | திருமணத்தில் திடீரென நுழைந்த காளை ஆடிய ஆட்டம்: திகிலூட்டும் வைரல் வீடியோ

"எக்ஸ்ரேவுக்கு இவ்வளவு ஒத்துழைக்கும் நோயாளியை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று இந்த வீடியோவின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏராளமான லைக்குகளும் கிடைத்து வருகின்றன. ஒரு விலங்கின் இத்தகைய பொறுமையான செயல்பாட்டைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'இந்த யானையை பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது' என ஒருவர் எழுதியுள்ளார். 'மனிதர்கள்கூட சிகிச்சையில் இவ்வளவு ஒத்துழைக்க மாட்டார்கள்' என மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | இது உனக்கு தேவையா...நபரை வெச்சி செஞ்ச பாம்பு: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News