இணையத்தில் புயலைக் கிளப்பிய எல்லி அவ்ரம் நடனம் ஆடிய “சம்மா சம்மா” வீடியோ

நடிகை எல்லி அவ்ரம் நடனம் ஆடிய சம்மா....சம்மா.. பாடல் இணையத்தில் புயலைக் கிளப்பி உள்ளது.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Jan 4, 2019, 05:25 PM IST
இணையத்தில் புயலைக் கிளப்பிய எல்லி அவ்ரம் நடனம் ஆடிய “சம்மா சம்மா” வீடியோ
Pic Courtesy : Youtube

பாலிவுட் திரைப்படங்களான 'மிகி வைரஸ்' மற்றும் 'கிஸ்க கிஸ்கோ பியார் கருன்' போன்ற படங்களில் நடித்த நடிகை எல்லி அவ்ரம் பற்றி தான் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. எப்பொழுது செய்திகளில் பரபரப்பாக வளம் வரும் எல்லி அவ்ரம், கிசுகிசுக்கு பெயர் போனார்.

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கங்கனா ரனாவத் நடித்த "குயின்" படத்தை தமிழ் ரீமேக்கான "பாரிஸ் பாரிஸ்" என்ற படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் எல்லி அவ்ரம், காஜல் அகர்வால் மார்பகத்தை அழுத்தி உள்ளாடை இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பது போன்று இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை எல்லி அவ்ரம்.

 

தற்போது அவர் நடனம் ஆடிய சம்மா....சம்மா.. என்ற ரீமிக்ஸ் பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி YouTube இல் கனிஷ்கா டேலண்ட் ஹப் பதிவேற்றிய, இந்த வீடியோ 12 லட்சத்திற்க்கு அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த பாடல் 1998 ஆம் ஆண்டு வெளியான 'சீனா கேட்' என்ற பாலிவுட் படத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகது.

வீடியோ: