டிசம்பரில் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அனைத்திலும் வெற்றி

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 12, 2024, 02:05 PM IST
  • சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
  • பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
டிசம்பரில் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அனைத்திலும் வெற்றி

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரகப் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இந்த கிரகப் பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு.

Add Zee News as a Preferred Source

அறிவாற்றல், பேச்சாற்றல், செல்வம், அழகு, உறவுகள் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் சுக்கிரன். டிசம்பர் இரண்டாம் தேதி சுக்கிரன் மகர ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். அதே மாதம் அதாவது டிசம்பர் 28ஆம் தேதி அவர் மீண்டும் கும்ப ராசியில் பெயர்ச்சியாவார். டிசம்பரில் இரண்டு முறை சுக்கிரன் பெயர்ச்சி நடப்பது விசேஷமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் (Taurus):

ரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் நடக்கவுள்ள இரண்டு சுக்கிரன் பெயர்ச்சிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த வெளிநாட்டு பயணங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

மேலும் படிக்க | நவம்பர் 16ம் தேதி இடம் மாறும் சூரியன்! இந்த 3 ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்!

விருச்சிகம் (Scorpio)

சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இந்த காலத்தில் வெற்றி அடையும். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் வந்து குவியும். பண வரவு அதிகமாகும்.

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். நம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். புதிய வேலையை தொடங்க இது ஏற்ற நேரமாக இருக்கும். பேச்சில் பொறுமை காப்பது நல்லது. முன்னர் செய்த முதலீடுகளால் இப்பொழுது லாபம் அதிகரிக்கும். இப்பொழுது முதலீடு செய்வதற்கும் ஏற்ற காலமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இப்பொழுது தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு 3 நாட்களில் ராஜயோகம் ஆரம்பம்.... முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News