Actor Sathyaraj Latest News: தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் சத்யராஜ் வாழ்க்கையில் மிகப்பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தமிழக மக்கள் மிகவும் வேதனைத் அடைந்துள்ளனர். அதுக்குறித்து பார்ப்போம்.
80 மற்றும் 90களில் தமிழ் திரையுலகை கலக்கிய நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். அவரின் காலக்கட்டத்தில் நடிதவர்கள் பலர் திரைஉலகை விட்டு சென்றுவிட்டாலும், அவர் இன்னும் நடித்துகொண்டே இருக்கிறார். அவரின் கதாபாத்திரமும் பேசுப்பொருளாக இருக்கும். அதற்கு காரணம் தற்கால சினிமாவுக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார். மேலும் பேன் இந்தியா படங்களுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஆகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் சினிமாதுறையில் கொடிகட்டிப் பறந்தாலும், மற்றொருபுறம் சமூக செயற்பாட்டாளராகவும் சத்யராஜ் செயல்பட்டு வருகிறார். அரசியல் ரீதியான கருத்துக்களை பேசி விவாதத்தை ஏற்படுத்துவதோடு சமூகப் பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இப்படி பொது வாழ்க்கையில் பரபரப்பாக இருக்கும் சத்யராஜை போலவே ஊட்டச்சத்து நிபுணரான அவரது மகளும் மகிழ்மதி இயக்கம் என்ற பெயரில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறார்.
அண்மையில் மக்களவைத் தேர்தலின் போது கூட பிரபல கட்சியிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறி அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றார்.
இந்நிலையில், சத்யராஜுன் மகள் திவ்யா சத்யராஜ் தனது குடும்பத்தின் தற்போதைய நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உள்ளது.
தனது தாய் மகேஷ்வரி கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக தெரிவித்துள்ள திவ்யா தனது தாய்க்கு பிஜி டியூப் மூலமாக மட்டுமே உணவு வழங்குவதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு உள்ளார். மேலும் அவர் உடல்நிலை தேறி பழைய நிலைக்கு கொண்டுவர நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்
இந்த சூழலில் தனது தந்தை சத்யராஜ் கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கிள் பேரண்ட்டாக இருந்து குடும்பத்தை வழிநடத்துவதாக உருக்கத்துடன் தெரிவித்த அவர், சத்யராஜின் அம்மாவும் ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டதால் தனது தந்தைக்கு சிங்கிள் பேரண்டாக தான் இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தாங்கள் இருவரும் பவர்ஃபுல்லான சிங்கிள் பேரண்ட் கிளப்பை உருவாக்கியதாக பெருமிதத்துடன் அவர் பதிவிட்டு இருந்ததைக் கண்ட பலரும் அவரது தாயார் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சத்யராஜின் மனைவி மகேஷ்வரிக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவ வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், தனது குடும்ப சூழலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட திவ்யா சத்யராஜை பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க - இனி என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் - கமல்ஹாசன் வேண்டுகோள்!
மேலும் படிக்க - புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ