Elon Musk அளிக்கும் 730 கோடி ரூபாய் பரிசு வேண்டுமா? அதற்கு இதை செய்தால் போதும்

சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசுபடுவது குறித்து எலன் மஸ்க் கவலையில் உள்ளார். மேலும் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2021, 04:16 PM IST
  • சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசுபடுவது குறித்து எலன் மஸ்க் கவலையில் உள்ளார்.
  • கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
  • இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குபவருக்கு 730.2 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும்.
Elon Musk அளிக்கும் 730 கோடி ரூபாய் பரிசு வேண்டுமா? அதற்கு இதை செய்தால் போதும்  title=

கலிபோர்னியா: உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான எலன் மஸ்க், வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் வெளியேற்றத்திற்கான தீர்வுகளைக் காண முனைந்துள்ளார். இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு சரியான தீர்வை அளிக்கக்கூடிய மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் நபருக்கு கோடிக்கணக்கில் வெகுமதியை அளிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளனர்.

புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களுக்கு 730 கோடி ரூபாய் வழங்கப்படும்

SpaceX மற்றும் டெஸ்லாவின் (Tesla) தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் இது குறித்து ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்குபவருக்கு 100 மில்லியன் டாலர் அதாவது சுமார் 730.2 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் தனது ட்வீட்டில், ‘சிறந்த கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தை (Technology) உருவாக்குபவருக்கு 100 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்போகிறேன்’ என்று எழுதியுள்ளார். மற்றொரு ட்வீட்டில், இது குறித்த முழுமையான தகவல்களை அடுத்த வாரம் தருவதாக எலன் மஸ்க் கூறினார்.

ALSO READ: Elon Musk: உலகின் No.1 பணக்காரரைப் பற்றிய 10 சுவாரசியமான விஷயங்கள்!!

சுற்றுச்சூழலை மேம்படுத்த விரும்புகிறார் எலன் மஸ்க்

சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசுபடுவது குறித்து எலன் மஸ்க் (Elon Musk) கவலையில் உள்ளார். மேலும் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை குறைக்கக் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க அவர் விரும்புகிறார். இந்த காரணத்திற்காக, வளிமண்டலத்தில் இருக்கும் கார்பனைக் கட்டுப்படுத்தக்கூடிய கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தைத் தயாரிப்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் எலன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா பெங்களூரில் ஒரு துணை நிறுவனத்தை பதிவு செய்துள்ளது. டெஸ்லா இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி ஆலை மற்றும் ஆர் அண்ட் டி பிரிவை உருவாக்கத் தயாராகி வருகிறது.

டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனம், நாட்டில் தனது அணியின் ஒரு பகுதியாக வைபவ் தனேஜா, வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகிய மூன்று இயக்குநர்களை நியமித்துள்ளது.

இது ஒரு தனியார் அன்லிஸ்டட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக 15,00,000 ரூபாயையும் கட்டண மூலதனமாக 1,00,000 ரூபாயையும் கொண்டுள்ளது.

ALSO READ: Elon Musk உலகின் பணக்காரர் ஆனது எப்படி தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News