'ஆள விட்றா சாமி...' சேட்டை செய்யும் பேபி பென்குயின் - கண்ணு வைக்கும் நெட்டிசன்கள்!

பிறந்து 97 நாள்களே ஆன குட்டி பென்குயினின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 21, 2022, 06:06 PM IST
  • எம்பரர் ஸ்டேட் பென்குயின், உலகின் மிகப்பெரிய பென்குயின் இனம்.
  • இவை அன்டார்டிகாவில் நீர் சூழந்த பனி பிரதேசத்தில் அதிக காணப்படும்.
'ஆள விட்றா சாமி...' சேட்டை செய்யும் பேபி பென்குயின் - கண்ணு வைக்கும் நெட்டிசன்கள்! title=

எம்பரர் ஸ்டேட் இன பென்குயின் தான் உலகின் மற்ற பென்குயின்களை விட பெரியது என்றும், அவை 45 அங்குலம் வரை வளரும். இந்த வகை பென்குயின் பெரும்பாலும் அன்டார்டிக்காவில் பனிக்கட்டி மற்றும் நீர் சூழ்ந்த இடங்களில்தான் அதிகம் காணப்படும் என கூறப்படுகிறது. 

அந்த வகையில், எம்பரர் ஸ்டேட் பென்குயின்களை வளர்க்கும் ஒரு காப்பக்கத்தில் உள்ள பென்குயின்தான் தற்போது இணையத்தில் சுற்றிவருகிறது. 

அதாவது பிறந்து வெறும் 97 நாள்களே ஆன, எம்பரர் ஸ்டேட் பென்குயின் ஒன்றின் எடையை அளவிட,  காப்பக்கத்தின் பணியாளர் ஒருவர் முயற்சித்தார். அந்த பென்குயினை எடை இயந்திரத்தில் ஏற்றி, எடையை சரிபார்ப்பதற்குள் அந்த பென்குயின், குடுகுடுவென ஓடிகிறது. அவர் பலமுறை முயன்றும் அந்த பென்குயின் ஒரே இடத்தில் நிற்க மறுக்கிறது. நீண்ட போராட்டத்திற்கு பிறகுதான், அதன் எடையை அளவிட முடிந்தது. 

மேலும் படிக்க | பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்: வியப்பில் நெட்டிசன்கள், வீடியோ வைரல

@Fasc1nate என்ற ட்விட்டர் பயனர் நேற்று (அக். 20),"பிறந்து 97 நாளான எம்பரர் ஸ்டேட் பெகுயினை எடைப்பார்ப்பதற்கு படும் போராட்டம்" என குறிப்பிட்டு வேடிக்கையான அந்த வீடியோ பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், பிறந்த 97 நாள்களே ஆகிறது என கூறப்படும் அந்த பென்குயின் 14.1 கிலோ எடையில் உள்ளது வீடியோவில் தெரிகிரது. 

மொத்தம் 1 நிமிடம் 3 வினாடிகள் உள்ள அந்த வீடியோ முதன்முதலில், Adventure World Official என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டது. ஒரு இடத்தில் நிற்காமல் சேட்டை செய்யும் பென்குயினின் வீடியோ வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், ஒருவர்,"எம்பரர் பென்குயின், வாழும் அனைத்து பென்குயின் இனங்களில் மிக உயரமான மற்றும் அதிக எடைக்கொண்டது. ஒரு வயதான பென்குயின் 122 செமீ & 30 கிலோ வரை இருக்கும். 97 நாட்களே ஆன இந்த குட்டி பென்குயின், 14.1 கிலோவில் உள்ளது. இது மிக இலகுவான, பஞ்சுபோன்ற சிறப்புமிக்க இறகுகளைக் கொண்டது" என பதிவிட்டுள்ளார். 

எம்பரர் பெங்குவின்கள், அன்டாடிகாவின் நீண்ட குளிர்காலத்தை, திறந்த பனியில் கழிக்கும். மேலும் இந்த கடுமையான பருவத்தில் கூட அவை இனப்பெருக்கம் செய்கின்றன. பெண்கள் ஒற்றை முட்டையை மட்டுமே இடும். பின்னர் உடனடியாக அதை விட்டுவிட்டுச் சென்றுவிடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, அவை சுமார் இரண்டு மாதங்களுக்கு வேட்டைக்கான பயணத்தில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 
  
மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News