உண்மையிலேயே மிலிட்ரியில இவ்வளவு ஜாலியா இருப்பாங்களா? வைரலாகும் பிரியாவிடை video

வைரலாகும் பிரியாவிடை வீடியோ, ராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் மகிழ்ச்சியானத் தருணங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2022, 07:50 AM IST
  • வைரலாகும் பிரியாவிடை வீடியோ
  • ராணுவ அதிகாரிகளும் ஜாலியான ஆசாமிகளா?
  • ராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் மகிழ்ச்சியானத் தருணங்கள்
உண்மையிலேயே மிலிட்ரியில இவ்வளவு ஜாலியா இருப்பாங்களா? வைரலாகும் பிரியாவிடை video title=

இந்திய ராணுவ அதிகாரி ஜீத் தில்லானுக்கு சக ஊழியர்களின் பிரியாவிடை, மனதைக் கவரும் வகையில் வைரலாகி வருகிறது

பணி ஓய்வு பெறும் லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் சிங் ஜீத் தில்லானுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் இதயம் கனிந்த பிரியாவிடை அளித்தனர்

அந்த வீடியோ சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. வைரலாகும் இந்த மிலிட்ரி வீடியோவில், லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் சிங் ஜீத் தில்லான் ராணுவ பாரம்பரியத்துடன் பிரியாவிடை கொடுத்து அனுப்புவது பதிவாகியுள்ளது. 

பிடித்தமான எந்த செயலுக்கும் இறுதி என்ற ஒன்று உண்டு என்பதுபோல, எவ்வளவுதான் பிடித்தமாக வேலை செய்தாலும், குறிப்பிட்ட வயதில் பணி ஓய்வு பெற வேண்டிய மரபு ராணுவத்தில் கட்டாயமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு நபரின் வாழ்க்கையில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது ஒரு முக்கியமான மைல்கல் என்பதால் அது கொண்டாடப்பட வேண்டும். அதிலும் கட்டுப்பாடு என்றாலே மிலிட்ரி என்றும், அங்கு ஜாலியாக இருக்கவே மாட்டார்கள் என்ற எண்ணத்தையும் மாற்றும் வீடியோ இது.

கட்டுப்பாட்டுடன் கொண்டாடப்படும் இந்த பணி ஓய்வு பிரியாவிடை வீடியோவில், இந்திய ராணுவ அதிகாரிகள் தங்கள் சக ஊழியருக்கு ராணுவ மரப்புபடி அற்புதமான பிரியாவிடை வழங்குவதைக் காணலாம்.

ALSO READ | 'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ 

சக ஊழியர்கள் அவரை நாற்காலியில் அமர வைத்து, ‘ஜாலி குட் ஃபெலோ’ என்று பாடினார்கள். லெப்டினன்ட் ஜெனரல் தில்லானும் உடன் சென்று, கைதட்டி, எல்லோருடனும் சேர்ந்து பாடலைப் பாடுகிறார்.

பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரலாகவும், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் (உளவுத்துறை) துணைத் தலைவராகவும் பணியாற்றிய ஜெனரல் தில்லானின், ராணுவப் பணியின் கடைசி நாளன்று இந்த பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகும் வீடியோவில் பலரும் கருத்திட்டுள்ளனர். 

நாட்டுக்கு சேவையாற்றிய அவருக்கு மக்கள் நன்றி தெரிவித்து நன்றி தெரிவித்தனர். ”நன்றி ஐயா. உங்களைப் போன்றவர்களால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். பணி ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். உங்கள் இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.” என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான், 'டைனி தில்லான்' என்று பிரபலமாக அறியப்பட்டவர், 1983 டிசம்பரில் ராணுவத்தில் சேர்ந்த அவர், காஷ்மீரை தளமாகக் கொண்ட XV கார்ப்ஸின் (Kashmir-based XV Corps) தலைவராக இருந்தபோது, ​​ஆபரேஷன் மா என்ற திட்டத்தைத் தொடங்கியதற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.  

குறிப்பாக தீவிரவாதத்தில் இணைந்த இளைஞர்களின் குடும்பங்களை அணுகி, தங்கள் குழந்தைகளை தேசிய நீரோட்டத்திற்கு திரும்பக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார் என்பதால் பலராலும் பாரட்டப்பட்டவர் லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான்.

ALSO READ | அட்ராசிட்டி தாத்தாவின் ஜாலி குத்தாட்டம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News