வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மணமகனின் ஒரு பரிதாபமான வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு அதிர்ச்சிதான் கிடைக்கும்.
இந்த வீடியோ காண வேடிக்கையாக இருந்தாலும், இதை பார்க்கும் போது நமக்கு வினோதமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை. மணமகனின் நண்பர்கள் சிலர் அவரை வைத்து ஒரு பெரிய காமெடியை அரங்கேற்றுகிறார்கள். அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு கொடுக்கும் குளிர்பானத்தில் மதுபானத்தை கலக்கி விடுகிறார்கள்.
இந்த குளிர்பானத்தை குடித்தவுடன் மணமகன் சிரிக்கத் தொடங்குகிறார். தன் நண்பர்கள் தன்னை கலாய்ப்பதை அவர் புரிந்துகொள்கிறார்.
மணமகனுக்கு அளிக்கப்பட்ட மதுபானம்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் வீடியோவில், மணமக்கள் மேடையில் இருப்பதையும், விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்வதையும் காண முடிகின்றது. மாப்பிள்ளையின் நண்பர்கள் அனைவரும் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்து ஏதோ சில திட்டங்களை தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து குளிர் பானங்கள் கொண்டு வந்து அதில் மதுபானத்தை கலக்கின்றனர்.
சிறிது நேரத்தில், அவர்கள் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை அளிக்கிறார்கள். மாப்பிள்ளை குளிர் பானத்தை குடித்த உடனேயே என்ன நடந்துள்ளது என்பதை புரிந்துகொள்கிறார்.
மாப்பிள்ளை தன் நண்பர்கள் செய்த விஷயத்தை நினைத்து சிரிக்கத் தொடங்குகிறார். மாப்பிள்ளையின் சிரிப்பைப் பார்த்து மணமகளும் முழு விஷயத்தையும் புரிந்துகொள்கிறார். அவருக்கும் சிரிப்பு வருகிறது. அவர் மணமகனுடன் ஏதோ பேசுவதை வீடியோவில் காண முடிகின்றது.
மேலும் படிக்க | இவ்வளவு குண்டு பாம்பா.. கையில் அப்படியே பிடித்த நபர்: வீடியோ வைரல்
இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க முடியாது
இந்த வீடியோவில் இருப்பது போன்ற காட்சியை நீங்கள் வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது. வழக்கமாக மாப்பிள்ளை மற்றும் மணமகளின் நண்பர்கள் பல வித கிண்டல் கேலிகளில் ஈடுபடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இது தேவையில்லாத ஒரு செயலாகத் தோன்றுகிறது.
மாப்பிள்ளையின் இந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
திருமணம் தொடர்பான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் kanumooriravi என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு மில்லியன் கணக்கான வியூஸ்களும் 26 லட்சத்தை விட அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
‘இப்படிப்பட்ட நண்பர்களிடம் சற்று அலர்டாக இருக்க வேண்டும்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘மாப்பிள்ளைக்கு பாவம் ஒன்றும் புரியவில்லை’ என மற்றொரு பயனர் கமெண்ட்ட் செய்துள்ளார். ‘மாப்பிள்ளையின் ரியாக்ஷன்.. வேறு லெவெல்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | ஆட்டோவில் கூலர்: இந்த ஆட்டோக்கார அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க... வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ