மாட்டிக்கொண்ட குட்டி, பதறி காப்பாற்றி வாரி அணைத்த தாய் குரங்கு: ‘சபாஷ்’ சொன்ன இணையவாசிகள்

Emotional Monkey Viral Video: தாய் குரங்கின் ஒரு வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை பார்த்து அனைவரும் வியந்து வரிகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 13, 2022, 12:39 PM IST
  • குட்டியை காப்பாற்ற களமிறங்கும் அம்மா குரங்கு.
  • ‘சபாஷ்’ என பாராட்டிய இணையவாசிகள்.
  • வியக்கவைக்கும் வைரல் வீடியோ.
மாட்டிக்கொண்ட குட்டி, பதறி காப்பாற்றி வாரி அணைத்த தாய் குரங்கு: ‘சபாஷ்’ சொன்ன  இணையவாசிகள் title=

வைரல் வீடியோ: குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். தாய் என்பவளின் இயல்பு ஒரே மாதிரிதான் இருக்கும். அது மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, அம்மா அம்மாதான்!! தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால், தாயால் தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தையை காப்பாற்ற தனது புத்திசாலித்தனத்தை, தனது ஆற்றலை, தனது துணிவை என அனைத்தையும் பயன்படுத்தி விடுவார். 

குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்வு ஒன்று நடந்தால், கண்டிப்பாக தாய்மார்கள் சூப்பர் ஹீரோக்களாக மாறிவிடுவார்கள். எப்படியும் தங்கள் குழந்தையை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணமே தாய்மார்களுக்கு மேலோங்கி இருக்கும். குறிப்பாக தாய் குரங்குகள் தங்கள் குட்டிகளை பொத்தி பொத்தி வளர்க்கின்றன. குரங்கு குட்டிகள் சில காலம் வரை தங்கள் தாய்மார்களின் கைகளை விடுவதே இல்லை, அவற்றை விட்டு எங்கும் செல்வதும் இல்லை. 

ஒரு குரங்கு குட்டி எக்கச்சக்கமாய் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள அதை காப்பாற்ற தாய் குரங்கு படும் பாட்டை விளக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. குரங்கு குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருக்கும் போது மரக்கிளைகளில் சிக்கி தவிப்பது வீடியோவைப் பார்த்தால்  தெரிந்தது. ஆனால் தாய் குரங்கு குரங்கு குட்டியை காப்பாற்ற துணிச்சலோடும் உறுதியோடும் வரும் விதம் காணத்தக்கது. இந்த வீடியோ வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ராட்சத தந்தத்துடன் தாக்க வந்த காட்டு யானை; கூலாக வண்டியை ஓட்டிய ஓட்டுநர்; வைரல் வீடியோ 

சிக்கிய குரங்கு

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், குரங்கு குட்டி விளையாடிக் கொண்டிருக்கும் போது மரக்கிளைகளில் சிக்கிக் கொள்கிறது என்பதை காண்கிறோம். தாய் குரங்கு இதை உடனடியாக பார்த்து விடுகிறது. மரத்தில் சிக்கிய குட்டி மிகவும் அவதிப்படுவதை காண நமக்கே கவலையாக இருக்கிறது. தாய் குரங்கை பற்றி கேட்கவே வேண்டாம். மனம் பதபதைத்தாலும், நீண்ட நேரம் முயன்று அந்த தாய் குரங்கு சமாளித்து தனது குட்டியை காப்பாற்றி வாரி அணைத்துக்கொண்டு, அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்கிறது. 

குட்டியை மீட்க அம்மா குரங்கு பட்ட பாட்டை இந்த பதிவில் காணலாம்: 

சபாஷ் சொன்ன நெட்டிசன்கள் 

குரங்கு மற்றும் அதன் குட்டியின் இந்த வீடியோ சமூக வலைத்தள பயனர்களை மிகவும் பாதித்து வருகிறது. இந்த வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. 

இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவை காணும் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தாய் குரங்கின் தாயன்பு வீடியோவை காண்பவர்களை வியக்க வைக்கிறது. குட்டி குரங்கை காப்பாற்ற, தாய் குரங்கு லாவகமாக செயல்படுகிறது. குட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், மிக சாமர்த்தியமாக, கவனமாக, குட்டிக்கு எந்த காயமும் ஏற்படாமல், தாய் குரங்கு குட்டியை மீட்டெடுக்கிறது. இது இணையனாசிகளை ‘சபாஷ்’ சொல்ல வைத்துள்ளது!!

மேலும் படிக்க | என்னிடமே உன் வேலைய காட்ரியா? குட்டி செய்த சேட்டை! அம்மா பூனையின் ரியாக்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News