என்னிடமே உன் வேலைய காட்ரியா? குட்டி செய்த சேட்டை! அம்மா பூனையின் ரியாக்சன்!

பூனைக்குட்டி ஒன்று வீட்டை விட்டு வெளியேற முயன்று கதவருகே வந்ததும் அதன் தாயிடம் சிக்கிக்கொண்டு சமாளிக்க முயற்சி செய்யும் நகைச்சுவையான காட்சி வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 13, 2022, 10:35 AM IST
  • தாயை பார்த்து பம்மிய குட்டி பூனை.
  • கதவிற்கு அருகில் பவ்வியமாய் அமர்ந்துள்ளது.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
என்னிடமே உன் வேலைய காட்ரியா? குட்டி செய்த சேட்டை! அம்மா பூனையின் ரியாக்சன்! title=

சமீபகாலமாக பூனைக்குட்டிகள் அதன் தாயை ஏமாற்றிவிட்டு வெளியேற முயற்சி செய்து கடைசியில் தோற்றுப்போய் ஓரமாக பதுங்கும் காட்சிகள் பலவற்றை இணையத்தில் காண முடிகிறது.  டீனேஜ் பசங்க மட்டும் தான் அவுட்டிங் எல்லாம் போவாங்களா நாங்களும் தான் போவோம் என்று இப்போது விலங்குகள் அனைத்தும் கிளம்பிவிட்டது போல என்று நினைக்க தோன்றும் அளவிற்கு இந்த வீடியோக்கள் அமைந்திருக்கின்றன.  சில வாரங்களுக்கு முன்னர் சிங்கக்குட்டி ஒன்று வீட்டை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்து கொண்டிருக்கையில், தாய் சிங்கம் அந்த குட்டியை தேடிப்பிடித்து இழுத்து செல்லும் காட்சிகள் வைரலானது.  

அதேபோல பூனைக்குட்டி வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கையில் அதன் தாய் பூனை ஓங்கி ஒரு அடி அடித்து அதனை அடக்கும் நகைச்சுவையான காட்சிகளை கண்டு மகிழ்ந்த நாம் தற்போது மீண்டும் ஒரு பூனைக்குட்டியின் நகைச்சுவையான செயலை தான் பார்க்க போகிறோம்.  வழக்கம்போல இந்த கவனத்தை ஈர்க்க கூடிய வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் கருஞ்சாம்பல் மற்றும் வெண்மை நிறம் கலந்த பூனைக்குட்டி ஒன்று அவுட்டிங் செல்ல நினைத்து வீட்டை விட்டு வெளியேறுவதற்காக அதன் தாய்க்கு தெரியாமல் மெதுவாக கதவுக்கு அருகில் வருகிறது.  

மேலும் படிக்க | காதல் செய்யும் பாம்புகள்; இப்படி ஒரு காட்சியா: வீடியோ வைரல் 

 

அங்கு தான் ஒரு ட்விஸ்ட், யாருக்கு தெரியாமல் வெளியேற வேண்டுமென்று அந்த பூனைக்குட்டி நினைத்ததோ அந்த ஆளே கதவின் அருகில் நிற்பதை பார்த்ததும் பூனைக்குட்டிக்கு குப்பென்று வியர்த்துவிடுகிறது.  பின்னர் அந்த பூனைக்குட்டி பம்மிக்கொண்டு கதவை சரிபார்ப்பது போன்று ஆக்டிங் செய்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.  பூனைக்குட்டி செய்யும் செயலை கண்ட இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை திரும்ப திரும்ப ரீவைண்ட் மோடில் ரசித்து பார்த்து வருகின்றனர்.  இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு இதுவரை எம்பத்தி எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளனர், மேலும் இந்த வீடியோவிற்கு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் பல நகைச்சுவையான கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | மழையில் மாஸ் நடனம் ஆடும் நாய்: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News