Viral Video: சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீங்க... ஜாலியா பந்து விளையாடி பார்த்திருக்கீங்களா!

கம்பீரமான தோற்றம் கொண்ட சிங்கம், வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால், இப்போது ஜாலியாக பந்து விளையாடும் சிங்கம் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2023, 07:47 PM IST
  • வைரலாகும் சிங்கம் வீடியோ.
  • விலங்குகளை வேட்டையாடும் சிங்கத்திற்குள்ளும், மென்மையான மனம் இருக்கிறது.
  • சிங்கம் கடற்கரை காற்றினை ரசித்துக்கொண்டே, ஓடி விளையாடுகிறது.
Viral Video: சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீங்க... ஜாலியா பந்து விளையாடி பார்த்திருக்கீங்களா! title=

சிங்கம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, அதன் கம்பீரமான தோற்றமும், அதிர வைக்கும் கர்ஜனையும் தான். சிங்கம் வனத்தின் ராஜா என்று அழைப்பக்கப்படுவதற்கான காரணமும் இதுதான். கம்பீரமான தோற்றம் கொண்ட சிங்கம், வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம். எந்த விலங்குக்கும் சிங்கத்தை எதிர் நிற்கும் தைரியம் இருக்காது. யானை சிங்கத்தை எதிர்த்து நிற்கும் என்றாலும், பொதுவாக சிங்கம் என்றாலே அது வீரத்தையும், கம்பீரத்தையும் நம் முன்னால் கொண்டு வருகிறது. காட்டு ராஜாவான சிங்கத்தின் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும். காட்டில் உள்ள மற்ற விலங்குகள் எல்லாம் அதன் சத்தம் கேட்டாலே  அடங்கிவிடுகின்றன.

ஆனால், விலங்குகளை வேட்டையாடும் சிங்கத்திற்குள்ளும், மென்மையான மனம் இருக்கிறது. ராஜா என்றாலே சீரியஸ் ஆக மட்டுமே இருக்க வேண்டுமா என்ன... அவர்களுக்கும் வாழ்க்கை ரசிப்பதற்கும், இயற்கை ரசித்து விளையாடுவதற்கும் உரிமை உண்டு தானே... இங்கே இந்த சிங்கமும், தனது அன்றாட டென்ஷன் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விடுமுறையை கழிக்க வந்தது போல் தோன்றுகிறது. இந்த சிங்கம் மிகவும் ஜாலியாக வந்து விளையாடுவதை பார்க்கும் போது, நம்மால் அதனை புரிந்து கொள்ள முடிகிறது.

வைரலாகும் வீடியோவில், சிங்கம் ஒன்று கடற்கரை ஒன்றில் ஜாலியாக பந்து விளையாடுவதை காணலாம். அளவில் பெரியதாக இருக்கும் பந்தினை, இங்கேயும் அங்கேயும் என ஓடி கட்டுப்படுத்தி, உற்சாகமாக பந்து விளையாடுகிறது. கடற்கரை காற்றினை ரசித்துக்கொண்டே, ஓடி விளையாடுகிறது.

வைரலாகும் சிங்கம் வீடியோவை கீழே காணலாம்.

 

 

முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ இணையதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. ஏராளமான லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க | Viral Video: மிரட்டிய பெண் சிங்கம்.. அடங்கிப் போன ஆண் சிங்கம்!

இதே போன்று, மனதிற்கு சந்தோஷம் தரும் ஒரு வீடியோவாக, சில நாட்களுக்கு முன், ஆண் மயில் ஒன்று, தனது காதலியை மயக்க அழகாக ஆடும் வீடியோ மிகவும் வைரலாகியது. வீடியோவில் காணபடும் மயில், தனது காதலியை ஈர்க்க, அழகிய நடனம் ஆடி அசத்துகிறது. ஆனால், ஏனோ, அந்த பெண் மயிலில் மனம் இரங்கவேயில்லை. அது காதல் கொள்ளும் மன நிலையில் இல்லை போலிருக்கிறது. இந்த வைரல் வீடியோ (Viral Video), Figen @TheFigen_ என்ற கணக்கில், X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதனை மறு பதிவிட்டு வருவதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனை கீழே உள்ள இணைப்பில் கண்டு ரசிக்கலாம்.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News