காட்டாற்று வெள்ளத்தை கடக்கும் ஆடுகளின் வீடியோ வைரல்

காட்டாற்று வெள்ளத்தில் ஆடுகள் பயப்படாமல் கரையைக் கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 12, 2022, 06:18 PM IST
  • கனமழையால் வெள்ளப்பெருக்கு
  • பல பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்
  • கூலாக ஆற்றைக் கடக்கும் வெள்ளாடுகள்
காட்டாற்று வெள்ளத்தை கடக்கும் ஆடுகளின் வீடியோ வைரல் title=

மழைகாலம் தொடங்கிவிட்டதால் எங்கு பார்த்தாலும் நீர் காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்திருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் தண்ணீர் காடாக மாறியுள்ளன. சில வீடுகளில் கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. கால்நடைகள் எல்லாம் தண்ணீரில் அடித்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

மேலும் படிக்க | என்னை அனுப்பாதீங்க... தோளில் சாய்ந்து அழும் ஆடு; கண் கலங்க வைக்கும் வீடியோ

இருப்பினும் மழை குறைந்தபாடில்லை. பருவமழை தொடங்கியிருப்பதால், வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களிலும் மழை நீடித்து வரும் நிலையில், இயற்கையின் சில அழகிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது. வைரலாகியிருக்கும் வீடியோ ஒன்றில் வெள்ளம் நிறைந்த பகுதியில், காட்டாற்று வெள்ளத்துக்கு இடையே ஆடுகள் பொறுமையாக ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ காண்போரை நெஞ்சை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், தானும் செல்லும்போது பிறருக்கும் வழிவிட்டால் முன்னேறிச் செல்லலாம் என்ற டேக் லைனுடன் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அப்பகுதயில் மழை பெய்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் சாலைகளில் எல்லாம் வெள்ளம் நிறைந்து ஓடுகிறது. அப்போது ஆற்றைக் கடக்க முயலும் ஆடுகள், வெள்ளத்தின் நடுவே இருக்கும் சிறிய குட்டுகள் மீது தாவித் தாவித் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஆற்றைக் கடக்கின்றன. இந்தக் காட்சியால் கவர்ந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். 

மேலும் படிக்க | Viral Video: ஒரு ஆட்டோவில் 27 பயணிகள்; அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News