Golden Pani Puri Video : பானிபூரி, வடநாட்டு உணவு என்றாலும் அதற்கு தமிழகத்தில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். வடநாட்டில் இருந்து வந்து இந்திய அளவில் பிரபலமான உணவுகளுள் ஒன்று, பானிபூரி. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்குள் சாட் உணவாக நுழைந்த இந்த பானிபூரி, இப்போது இண்டு இடுக்குகளில் இருக்கும் கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது.
ஒவ்வொரு நகரத்திறகும் சுவையும், பானிபூரியின் சைஸும் வேறுபட்டாலும் சாப்பிடும் முறை என்னவோ ஒன்றுதான். பானிபூரியை நொறுக்கி, உள்ளே உருளைக்கிழங்கை வைத்து அந்த காரமான பானியை ஊற்றி உடையாமல் வாயில் பாேடுவதுதான். அனைத்திலும் புதுமையை புகுத்த வேண்டும் என்று பாடுபடும் இந்தியர்கள், பானிபூரியிலும் சமீபத்தில் சில காலங்களாக புதுமையை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
சாக்லேட் பானிபூரி, சீஸ் பானிபூரி என்று கொஞ்சம் சகித்து கொண்டு சாப்பிடும் வகையிலான வகைகள் வரத்தொடங்கின. ஆனால், அவற்றை மிஞ்சும் அளவிற்கான பானிபூரி வகை ஒன்று, தற்போது புதிதாக மார்கெட்டில் வந்து இறங்கி இருக்கிறது.
தங்கத்தில் பானிபூரியா?
தங்கத்தில் நெக்லஸ் செய்யலாம், கம்மல்-ஜிமிக்கி, மோதிரம், ஒட்டியானம் செய்யலாம், அதெப்படிங்க பானிபூரி செய்ய முடியும்? என கேட்பவர்களுக்கு விடையாக வந்திருக்கிறது இந்த பானிபூரி. தங்கத்தில் என்றால், அச்சு அசல் தங்கத்தில் இந்த பானிபூரி செய்யப்படவில்லை. கடைகளில் இனிப்பு வகைகளின் மேல் பூசித்தரப்படும் கோல்டன் ஷீட் கலரில் இருக்கும் காகிதம், இந்த பானிபூரியின் மீது பூசப்படுகிறது.
இந்த பானிபூரி, ஒரு ஸ்வீட் வகையை சேர்ந்ததாம். இந்த இனிப்பு பானிபூரிகளுக்காக உருவாக்கப்படும் பானிபூரியை வாடிக்கையாளர்களின் எதிரிலேயே சுடுகின்றனர். பின்னர், அதனை ஒரு தங்கத்தட்டில் வைத்து, அதில் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை சேர்கின்றனர். பின்னர், அதில் தேன் ஊற்றுகின்றனர். இதையடுத்து, அந்த தங்கத்தட்டில் கோல்டன் நிறத்திலேயே இருக்கும் ஒரு குட்டி டம்ளரை எடுத்து அதிலும் அந்த பூரியில் ஊற்றி சாப்பிடுவதற்கான இனிப்பு ரசத்தை ஊற்றுகின்றனர்.
இந்த இனிப்பு பானிபூரியை, அதன் மேல் உள்ள தங்க நிற காகிதத்தை எடுக்காமலேயே சாப்பிடலாமாம். தங்கத்தில் மட்டுமல்ல, வெள்ளி நிறத்தில் கூட இந்த பானிபூரி விற்கப்படுகிறது.
மேலும் படிக்க | போட்டோ எடுத்தது ஒரு குத்தமா!! வெச்சி செஞ்ச மான்: வைரல் வீடியோ
வைரல் வீடியாே..
தற்பாேது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் அந்த தங்க பானிபூரியை சாப்பிடுவது பாேன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், “இந்த வீடியோவை பார்க்காமலேயே இருந்திருக்கலாம்” என கமெண்ட்களில் கூறி வருகின்றனர்.
விலை என்ன தெரியுமா?
இந்தியாவை பொறுத்தவரை சாதாரண பானி பூரியின் விலை ரூ.25ல் இருந்து 30 வரை விற்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் 5 முதல் 6 பானிபூரி பீஸ்கள் வரும். அதுவே, இந்த தங்க பானிபூரியின் விலை இதை விட டபுள் மடங்காக இருக்கிறது. இதன் விலை, ஒரு ப்ளேட்டிற்கு ரூ.269 ரூபாயில் இருந்து ரூ.320 வரை விற்கப்படுகிறது. இது ஆன்லைனில் விற்கப்படும் விலைதான். நேரில் இதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம் என பேசப்படுகிறது.
மேலும் படிக்க | Girl Dance Video: ‘யிம்மி யிம்மி’ இளம்பெண்ணின் வீடியோ.. ஷாக் ஆன நெட்டிசன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ