காட்டு ராஜான்னா சிங்கம்! ஆனா தைரியம் இல்லைன்னா அசிங்கம்! கெத்து காட்டும் ரைனோ

Rhinoceros Video Viral: காண்டாமிருகத்தை பார்த்ததும் ஓட ஆரம்பித்த சிங்கம், வீடியோவை பார்த்தால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 10, 2023, 05:52 PM IST
  • காண்டாமிருகத்தை பார்த்து சிங்கம் ஓடும் வீடியோ டிரெண்டிங்
  • காட்டுக்கு ராஜா யாரு?
  • விசித்திரமான காட்டு ராஜா
காட்டு ராஜான்னா சிங்கம்! ஆனா தைரியம் இல்லைன்னா அசிங்கம்! கெத்து காட்டும் ரைனோ title=

வைரல் வீடியோ: காண்டாமிருகத்தின் பலம் அனைவருக்கும் தெரியும் என்றாலும், அது சிங்கத்தை விட பலமானதா, வீரியம் மிக்கதா என்றால் இல்லை என்று தான் சொல்வோம். ஆனால், காண்டாமிருகத்தை பார்த்ததும் ஓட ஆரம்பித்த சிங்கத்தின் வீடியோவை பார்த்தாலே தலை சுற்றுகிறது. காட்டுராஜாவின் கோழைத்தனமான வீடியோ வைரலாகி வருகிறது, இதைப் பார்த்தால் பல கேள்விகளை எழுப்புகிறது. காண்டாமிருகத்தை பார்த்தால் சிங்கத்திற்கு ஏன் பயம் வந்தது? அப்படி என்ன பிரச்சனை என்று கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை  

காண்டாமிருகத்தைப் பார்த்ததும் ஓடும் சிங்கங்கள் 
சிங்கம் காட்டின் ராஜா என்று நம்பப்படுகிறது எல்லா விலங்குகளும் சிங்கத்தை பார்த்து பயப்படுகின்றன, ஆனால் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் இரண்டு காண்டாமிருகங்கள் வந்தவுடன், சிங்கங்கள் அவற்றைப் பார்த்துவிட்டு ஓடத் தொடங்குவதைக் காணலாம். வீடியோவைப் பார்த்தால், இந்த காண்டாமிருகங்கள் சிங்கத்தைத் தாக்கப் போவதாகத் தெரியவில்லை, ஆனால் இரண்டு சிங்கங்கள் பயந்து ஓடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் படிக்க | அன்பில் உருகும் யானையின் பரிவு! வெட்கி தலைகுனிய வேண்டாமா? வீடியோ வைரல்
 
இந்த வீடியோவை X வலைதளத்தில் @AMAZlNGNATURE என்ற கணக்கில் பகிர்ந்துள்ளனர். காட்டின் அரசன் யார்? என்ற கேள்வியுடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்...

சிங்கத்தின் புறமுதுகிட்டு செல்லும் காட்சியை பார்த்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். சிங்கத்தை காட்டின் ராஜா என்று அறிவித்தது யார் என்கிறார்? இதனை பலரும் பகிர்ந்துள்ளனர். வீடியோவுக்கு பல வகையான வேடிக்கையான கருத்துகளும் வருகின்றன.

சிங்கத்தை கேலி செய்யும் மக்கள்
இரண்டு சிங்கங்கள் நடுரோட்டில் அமர்ந்து ஓய்வெடுப்பதை வீடியோவில் காணலாம். இதற்கிடையில் பின்னால் இருந்து இரண்டு காண்டாமிருகங்கள் வருகின்றன. இந்த இரண்டு காண்டாமிருகங்களைப் பார்த்தவுடனேயே சிங்கங்கள் பயந்து அந்த இடத்தில் இருந்து கிளம்புகின்றன. சிங்கத்தை காட்டின் ராஜா என்று அழைப்பதால் காண்டாமிருகங்களுக்கு பயப்படுவதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும் படிக்க | பட்டப் பகலில் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

அதனால் தான் இந்த வீடியோவைப் பார்த்து பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த வீடியோக்களைப் பார்த்தால் காண்டாமிருகங்கள் காட்டின் ராஜாக்களாக இருக்க வேண்டும்' என ஒரு பெண் கருத்து தெரிவித்து எழுதினார்.

இந்த வீடியோ மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. இந்த வீடியோ தி ஃபிகன் என்ற ட்விட்டர் கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இருப்பினும், இதற்கு முன்பும் இதேபோன்ற ஒரு வீடியோ வைரலானது, அதில் காண்டாமிருகங்கள் ஆற்றில் இருந்து தண்ணீரைக் குடிக்கின்றன, அவற்றைப் பார்த்த சிங்கங்கள் தண்ணீரைக் குடிக்காமல் திரும்பிச் சென்றன. இது போன்ற பல வீடியோக்களை பார்க்கும்போது, உண்மையில் காட்டின் ராஜா யார் என்ற கேள்வி எழுகிறது. காண்டாமிருகத்தை காட்டின் ராஜான்னு முடி சூடிட்டாங்களா? தெரியாம போச்சே?

மேலும் படிக்க | சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட திருநங்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News