CIA எய்ட்ஸ் நோயை பரப்பியதா? தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சொன்னது என்ன?

எய்ட்ஸ் நோய் எப்படி பரவியது? என்ற மர்மம் இன்றுவரை நீடித்து வரும் நிலையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ இதனை பரப்பியதாக ஒரு வதந்தியும் உள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 4, 2022, 04:54 PM IST
  • எய்ட்ஸ் நோயை பரப்பியது யார்?
  • பின்புலத்தில் சிஐஏ இருந்ததா?
  • ஆய்வாளர்கள் விளக்கம்
CIA எய்ட்ஸ் நோயை பரப்பியதா? தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சொன்னது என்ன?

உலகின் ஆட்கொல்லி நோய்களுள் முதன்மையானதாக இருக்கும் நோய் எய்ட்ஸ். 1981 ஆம் முதன்முதலாக எய்ட்ஸ் நோய் பற்றிய அறிவிப்பை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டது. அன்று முதல் இந்த நோயை குணமாக்கும் மருந்துகளை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் இரவு பகலாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | கால்களால் கிலோமீட்டரை கவர் செய்யும் மான்..! - Viral Video

இந்நிலையில், இந்த நோய் எப்படி உருவானது? எங்கிருந்து பரவியது? என்பது மர்ம முடிச்சாக உள்ளது. இது குறித்து பல்வேறு வதந்திகள் உலகம் முழுவதும் கூறப்படும் நிலையில், அமெரிக்காவின் சிஐஏ-வால் இந்த நோய் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களையும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அழிக்கவும், அமெரிக்காவின் சிஐஏ(CIA) உருவாக்கிய ஆயுதம் தான் எய்ட்ஸ் நோய் என குற்றம்சாட்டப்பட்டது. எய்ட்ஸ் நோய் என்பது தானாக உருவானது அல்ல, இதற்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும் இன்றளவும் கூறப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் இருந்து எய்ட்ஸ் பரவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பதோ எம்பெக்கி இதனை திட்டவட்டமாக மறுத்தார். அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டின் ராணுவ ஆய்வகங்களில் எய்ட்ஸ் நோயை உருவாக்கியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவரின் இந்தக் குற்றச்சாட்டு உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னும் சிலர், 1978 ஆம் ஆண்டுகளில் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் ஹெபடிடைஸ் பி பரிசோதனையின்போது வேண்டுமென்றே ஓரினைச்சேர்க்கையாளர்களிடம் எய்ட்ஸ் நோய் பரப்பபட்டதாக குற்றம்சாட்டினர். 

ALSO READ | ஆன்லைனில் கணவனை ஏலம் விட்ட பெண்..! 12 பெண்கள் வாங்க சம்மதம்

ஆனால் எய்ட்ஸ் நோயைக் கண்டுபிடித்த டாக்டர் ராபர்ட் காலே, டாக்டர் லூக் மாண்டாக்னியர் ஆகியோர் இந்த கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளனர். 1930-களில் குரங்குகளிடம் இருந்து ஹெச்.ஐ.வி மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் அவர்கள் அனுமானித்துள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News