கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஆன்லைன் மூலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் சகஜமாகிவிட்டது. ஆனால், நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனையே ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த கூத்து அரங்கேறியுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த லிண்டா மெக்அலிஸ்டர் என்பவர் தனது கணவர் ஜான் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசிக்கிறார்.
ALSO READ | குழந்தையின் ரியாக்ஷன்... சான்ஸே இல்ல: அம்மா அப்படி என்ன செஞ்சாங்க? வைரல் வீடியோ
அவர் விளையாட்டாக ஆன்லைன் தளம் ஒன்றில் தனது கணவனை விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது எனத் தெரிவித்த அவர், ஏலம் இப்போது தொடங்குவதாக கூறியுள்ளார். மேலும், ஜான் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. படப்பிடிப்பு மற்றும் மீன்பிடிக்க விரும்புவார். மிகவும் நல்லவர் என்ற அந்த ஏல போஸ்டில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்தனர். இந்த ஏலம் இந்திய ரூபாயில் 5 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. பின்னர் சில மணி நேரங்களில் அந்த போஸ்டை மெக் அலிஸ்டர் நீக்கினார். கணவனை பெண் ஒருவர் ஆன்லைன் ஏலத்தில் விட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ALSO READ | Viral Video: என்ன ஒரு கம்பீர நடை; இதுவல்லவோ அசல் ‘பாயும் புலி’!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR