வனப்பகுதியில் பொதிந்திருக்கும் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. இயற்கை சூழ் உலகில், நடக்கும் அனைத்து விஷயங்களுமே அதியசம் தான். மர்ம பிரதேசமாக இருக்கும் வனப்பகுதியில், செடி கொடிகள் முதல் நீரோடை மற்றும் விலங்குகள் வரை அன்றாடம் செய்யும் ஆச்சர்யங்கள் ஏராளம். அதனை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்கியவான்கள் எனலாம்.
ALSO READ | ஆன்லைனில் கணவனை ஏலம் விட்ட பெண்..! 12 பெண்கள் வாங்க சம்மதம்
அந்தவகையில், மான் ஒன்று கிலோமீட்டரை கவர் செய்யும் வகையில் லாங் ஜம்ப் செய்வதை பார்த்த சிலர் மெய் சிலிர்த்துபோகும் வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதுவரை மானின் அப்படியான ஜம்பை பார்த்திராத அவர்கள், நேரடியாக பார்த்தவுடன் வியப்பின் உச்சத்துக்கே செல்கின்றனர். அதில் ஒருவர் அந்த அதியத்தை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
And the gold medal for long & high jump goes to.......@ParveenKaswan
Forwarded as received pic.twitter.com/iY8u37KUxB— WildLense® Eco Foundation (@WildLense_India) January 15, 2022
அந்த வீடியோவில், வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றிருக்கும் ஒரு குழுவினர், நீரோடை அருகில் நின்று மான் கூட்டத்தை ரசிக்கின்றனர். அப்போது, அந்த வழியாக வேகமாக ஓடி வரும் மான் ஒன்று சாலையை மிக உயரமாக ஜம்ப் செய்து கடப்பதுடன், வெகு தொலைவுக்கு சென்று லேண்டாகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட பூரிப்பு, இணையத்தில் பார்ப்பவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், பலரும் இந்த வீடியோவை லைக் செய்து, ஷேர் செய்து வருகின்றனர். மானின் லாங் ஜம்புக்கு நிச்சயம் கோல்டு மெடல் கொடுக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
ALSO READ | Viral Video: என்ன ஒரு கம்பீர நடை; இதுவல்லவோ அசல் ‘பாயும் புலி’!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR