பாசிச, இனவெறி இந்து மேலாதிக்க தலைமையில் சிக்கிய இந்தியா -இம்ரான் கான்!

ஜெர்மனி நாஜிகளால் கைப்பற்றப்பட்டதைப் போல இந்தியா ஒரு பாசிச, இனவெறி இந்து மேலாதிக்க சித்தாந்தம் கொண்ட தலைமையால்  கைப்பற்றப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!

Written by - Mukesh M | Last Updated : Aug 18, 2019, 02:31 PM IST
பாசிச, இனவெறி இந்து மேலாதிக்க தலைமையில் சிக்கிய இந்தியா -இம்ரான் கான்!

ஜெர்மனி நாஜிகளால் கைப்பற்றப்பட்டதைப் போல இந்தியா ஒரு பாசிச, இனவெறி இந்து மேலாதிக்க சித்தாந்தம் கொண்ட தலைமையால்  கைப்பற்றப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "ஜெர்மனி நாஜிகளால் கைப்பற்றப்பட்டதைப் போல இந்தியா ஒரு பாசிச, இனவெறி இந்து மேலாதிக்க சித்தாந்தம் கொண்ட தலைமையால்  கைப்பற்றப்பட்டுள்ளது. இது இந்தியா ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 மில்லியல் காஷ்மீரிகளை, இரண்டு வாரத்திற்கும் மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவை கைப்பற்றியுள்ள பாசிச தலைமையின் ஆட்டத்தை கண்டு வரும் உலக மக்கள் இதனை ஜ.நா-வின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பாசிச தலைமையின் இந்த அச்சுறுத்தல் பாக்கிஸ்தான் வரை தற்போது நீண்டுள்ளது, ஏன் நேரு மற்றும் காந்தியின் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் மீதும் இந்த அச்சுறுத்தல்கள் நீண்டுள்ளது. RSS -பாஜக ஸ்தாபக பிதாக்களின் நாஜி சித்தாந்தம், இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை சித்தாந்தங்களுக்கு இடையிலான தொடர்பை புரிந்து கொள்ள கூளில் தேடுபொறு ஒன்று போதும்.

ஏற்கனவே 4 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களை எதிர்கொண்டு குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜீனி பாட்டிலுக்கு வெளியே இருப்பதால் உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும், வெறுப்பு மற்றும் இனப்படுகொலை கோட்பாடு, RSS குண்டர்களுடன் சேர்ந்து, சர்வதேச சமூகம் அதைத் தடுக்க இப்போது செயல்படாவிட்டால் மேலும் பரவி விடும்.

பாசிச, இனவெறி இந்து மேலாதிக்க மோடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தின் பாதுகாப்பையும் உலகம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இது பிராந்தியத்தை மட்டுமல்ல, உலகையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை.

இந்து மேலாதிக்க மோடி அரசு பாகிஸ்தானுக்கும் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, உண்மையில் நேரு மற்றும் காந்தியின் இந்தியாவின் துணிவையும் நசுக்குகிறது.  நாஜி சித்தாந்தத்திற்கும் RSS-பாஜக ஸ்தாபக பிதாக்களின் இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை சித்தாந்தத்திற்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்ள கூகிள் செய்யுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

More Stories

Trending News