Beware: க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரித்துவிட்டதா? 30% ஹேஷ்டேக் பின்னணி

கிரிப்டோ கரன்சிக்கு அரசு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்துவிட்டதா? தவறான புரிதலும் 30% டிரெண்டிங் ஹேஷ்டேக்கும்... தெளிவான விளக்கம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2022, 03:12 PM IST
  • க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை
  • இதுவரை பிட்காயினுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் 30% ஹேஷ்டேக் பின்னணி
Beware: க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரித்துவிட்டதா? 30% ஹேஷ்டேக் பின்னணி title=

புதுடெல்லி: கிரிப்டோ கரன்சியின் வருவாயில் 30% வரி விதிக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு பல்வேறு வதந்திகளை கிளப்பியிருக்கிறது.

2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு கிரிப்டோ கரன்சிக்கு அரசு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்துவிட்டதாக பரவலாக நம்பப்படுகிறது.

இந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு டிஜிட்டல் உலகில் ‘மீம்’களாக வலம் வருகிறது. சமூக ஊடகங்களில் 30% என்ற ஹேஷ்டேக் வைரலாகிறது.
ஆனால், உண்மையில், மத்திய அரசு கிரிப்டோ கரன்சிகளுக்கு அங்கீகாரம் அளித்துவிட்டதா?  

உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இதில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் டாலரை விட அதிக மதிப்பு கொண்டதாக உள்ளன என்பது இந்த டிஜிட்டல் கரன்சிக்கான எதிர்பார்ப்புகளை, இன்றைய டிஜிட்டல் உலகில் உணர்த்துவதாக இருக்கிறது. 

கிரிப்டோ கரன்சியின் மூலம் எவ்வளவு வருவாய் வந்தாலும் அதற்கு வரி இல்லை என்ற நிலையே இதுவரை இருந்த நிலையில், தற்போது அதற்கு அரசு 30 சதவிகித வரி விதிப்பதாக சொன்னதால் வந்த குழப்பத்தின் விளைவு தான் இது.

Also Read | விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன?

ஆனால், பணம் பதுக்கும் நபர்களுக்கு டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் கருப்பு பணத்தை பதுக்க ஏதுவாக இருந்தது, எனவேதான், மத்திய அரசு அரசு ஒரு இணைய பணத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

ஆனால், அது பிட்காய்ன் போன்றதாக இருக்க முடியாது. அது போன்றதும் அல்ல. இந்தியாவில் இது வரை கிரிப்டோகரன்சி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.  

டிஜிட்டல் யுகத்தில் டிஜிட்டல் கரன்ஸி என்பது பிரபலமான கரன்சியாக மாறிவிட்டாலும், இது தொடர்பாக மக்கள் அனைவருக்கும் புரிதல் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

budget

எந்த ஒரு கரன்ஸியும் ஏதோ ஒரு அரசிடமோ, அல்லது ஒரு வங்கியிடமோ கட்டுப்பாட்டில் இருப்பதால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு கரன்ஸியை மக்கள் தேடினர்.

அதனால் உருவானதே டிஜிட்டல் கரன்சி. பிட்காயின் எனபதும் டிஜிட்டல் கரன்சியின் ஒரு வடிவம் ஆகும். 2009 ஆம் ஆண்டு இணையத்தில் பிரபலமாக தொடங்கிய இந்த பிட்காயின் யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காது. 

கரன்சிகளின் அடிப்படை பயனே பண்டமாற்று முறை எனபதும், ஒரு காலத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களும் கரன்சியாக செயல்பட்டதும் நினைவு கொள்ளத்தக்கது.

கிரிப்டோ ஒருபோதும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகாது என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது.

ALSO READ | Budget 2022 Reaction: பட்ஜெட் மீதான முதல் எதிர்வினைகள்

Bitcoin, Ethereum அல்லது NFT ஒருபோதும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகாது. க்ரிப்டோ சொத்துக்கள் என்பது இரண்டு நபர்களிடையே மதிப்பு தீர்மானிக்கப்படும் சொத்துக்கள். நீங்கள் தங்கம், வைரம், கிரிப்டோ ஆகியவற்றை வாங்கலாம், ஆனால் அதற்கு அரசின் மதிப்பு அங்கீகாரம் இருக்காது.

தனியார் கிரிப்டோவில் முதலீடு செய்பவர்கள், அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் முதலீடு வெற்றிபெறுமா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஒருவருக்கு நஷ்டம் ஏற்படலாம், இதற்கு அரசு பொறுப்பல்ல: நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன்

பிட்காயின், எத்தேரியம் போன்றவை அல்ல, டிஜிட்டல் ரூபாய் மட்டுமே சட்டப்பூர்வமானதாக இருக்கும்.

ALSO READ | Union Budget 2022: மத்திய வங்கியின் மூலம் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News