இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின்போது, வெர்ஸ்டாப்பனின் ரெட் புல் காற்றில் பறந்து வந்து மெர்சிடிஸ் மீது மோதியதில் நிகழ்ந்த விபத்து வீடியோ அனைவரையும் பதற வைக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவருக்கும் ஓரளவு தான் காயம் என்பது ஆறுதல் தருகிறது.
ஃபார்முலா ஒன், W12இல் நடைபெறவிருந்த மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டது. வெர்ஸ்டாப்பனின் (Verstappen) வலது-பின் டயர் ஹாமில்டனின் ஹெல்மெட்டைத் தாக்கும் படங்களை துல்லியமாக இந்த வீடியோ காட்டுகிறது.
This angle of the Hamilton-Verstappen crash is absolutely nuts. Thank god for the halo, Hamilton’s head coulda been taken off pic.twitter.com/YJEJACRNTl
— Joe (@JoeRiveraSN) September 12, 2021
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்க இந்த விபத்து காரணமானது. பிரபல கார் பந்தய வீரர்களான லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) மற்றும் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) இருவருக்கும் ஏற்பட்ட விபத்து இருவரையுமே பந்தயத்திலிருந்து வெளியேற்றியது.
ஹாமில்டனும், வஎர்ஸ்டாபனும் 53 வது லேப் 26ல் (Lap 26 of 53) இருந்தனர். அப்போது, வேரியண்டே டெல் ரெட்டிஃபிலோ (Variante del Rettifilo) வழியாக இருவரும் அருகருகே சென்றுக் கொண்டிருந்தபோது, வெர்ஸ்டாப்பனின் கார், காற்றில் பறந்து மெர்சிடிஸின் மேல் மோதியது. வெர்ஸ்டாப்பனின் வலது-பின் டயர் ஹாமில்டனின் ஹெல்மெட்டைத் தாக்கியது. .
Hamilton & Verstappen crash again! This is almost becoming Prost/Senna from the 90s. Thankfully the Halo again saves this from becoming too scary
Otherwise, an absolutely cracking Race, this. #ItalianGP #F1 pic.twitter.com/3LOA5wQxke
— Richard-Lee Read (@RichardLeeRead) September 12, 2021
பந்தயத்தில் ஈடுபட்டிருந்த இருவருக்கும் காயமேற்படவில்லை என்றாலும், இருவரும் பந்தயத்திலிருந்து வெளியேறினார்கள். இந்த செய்தியை ஃபார்முலா 1.காம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து கிராண்ட் பிரிக்ஸ் புலனாய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ஹாமில்டன், halo தான், தன்னை பாதுகாத்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். ஆனால், விபத்தினால் அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ உதவியை நாடுவதாகவும் ஹாமில்டன் தெரிவித்தார்.
"உண்மையில் நான் அதிர்ஷ்டசாலி" என்று ஹாமில்டன் கூறினார். "haloவுக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அதுதான் என் உயிரையும், கழுத்தையும் காப்பாற்றியது. விபத்து நேர்ந்தபோது எனக்கு என்ன தோன்றியது என்பதை வார்த்தையால் சொல்ல முடியாது. ஒருவேளை புகைப்படங்களைப் பார்த்தால் அது புரியலாம் ஆனால் என் தலை மிகவும் முன்னோக்கி உள்ளது. அதனால் தான் பாதிப்பு ஏற்படவில்லை. கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
ALSO READ | BCCI on T20I: அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 2 கூடுதல் T20 போட்டிகள்!?
இந்த விபத்தால் வெர்ஸ்டாப்பனுக்கு ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸிற்கான மூன்று இடங்கள் பின்தங்கினார். மோன்சாவில் நடந்த விபத்திற்காக அவருக்கு இரண்டு பெனால்டி புள்ளிகள் வழங்கப்பட்டன.
இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டம் வெல்லும் போட்டியாளர்களுக்கிடையிலான மோதலில் இருவர் விலக, டேனியல் ரிச்சியார்டோவை அதிர்ஷ்டம் அரவணைத்துக் கொண்டது. 2012 பிரேசிலிய கிராண்ட் பிரிக்ஸுக்குப் பிறகு ரிச்சியார்டோ இப்போது தான் பட்டத்தை வென்றிருக்கிறார். லாண்டோ நோரிஸ் (Lando Norris) இரண்டாவது இடத்தைப் பிடிக்க, வால்டெரி பொட்டாஸ் (Valtteri Bottas) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ALSO READ | இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறார் தோனி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR