#கருணாநிதிமறைவு: CSK & சுரேஷ் ரெய்னா இரங்கல்!!

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வீரர் சுரேஷ் ரெய்னா இரங்கல் தெரிவித்து ட்விட்! 

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Aug 8, 2018, 01:24 PM IST
#கருணாநிதிமறைவு: CSK & சுரேஷ் ரெய்னா இரங்கல்!!

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வீரர் சுரேஷ் ரெய்னா இரங்கல் தெரிவித்து ட்விட்! 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை என்றும், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியுள்ள நிலையில், அவரது மறைவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சுரேஷ் ரெய்னாவும் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

சிஎஸ்கே அணி பதிவிட்ட ட்விட்டர்-ல்... ''தமிழகத்தில் சூரியன் இன்று அஸ்தமித்து விட்டது. தமிழ் மொழிக்கும், மாநிலத்துக்கும் கருணாநிதியின் பங்களிப்பு நிக்கரற்றது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுரேஷ் ரெய்னா பதிவிட்ட ட்விட்டரில்.... ''திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.