"ராணியும் அவரது குதிரையும்" - கங்கனாவின் வைரல் Video!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவட், தான் குதிரை சவாரி செய்யும் விடியோவினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்!

Updated: Aug 6, 2018, 10:07 AM IST
"ராணியும் அவரது குதிரையும்" - கங்கனாவின் வைரல் Video!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவட், தான் குதிரை சவாரி செய்யும் விடியோவினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்!

தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தலையை காண்பித்து விட்டு பாலிவுட்டில் பிஸியான நடிகை கங்கனா ரணாவத். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையினை பதித்துள்ளார்.

தமிழில் ஒரு படத்தில் மட்டும் நடித்தாலும் தமிழகத்தில் ரசிகர்கள் பலரை கொண்டவர் கங்கனா. இவர் சமீபத்தில், தமிழகத்தின் கோவையில் இருக்கும் ஈஷா மையத்தின் ஆதிகேஷ் ஆஸ்ரமத்திற்கு சென்று, அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது தான் குதிரை சவாரி செய்யும் விடியோவினை பகிர்ந்துள்ளார்.

The Queen and her Horse என பெரயிடப்பட்டு இந்த பதிவில்... வாரம்தோறும் ஞாயிற்று கிழமைகளில் குதிரை சவாரி மேற்கொண்டு பொழுதுபோக்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.