'வேணாம்..விட்டுடு..': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வெச்சி செஞ்ச எருமை, வைரல் வீடியோ

Lion Viral Video: இந்த வீடியோ உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்!! காட்டு ராஜா சிங்கத்தை அசால்டாய் மேலே தூக்கி வீசும் எருமையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 11, 2022, 07:21 PM IST
  • வேட்டையாட வந்த சிங்கம்.
  • பாய்ந்து வந்து பந்தாடிய எருமை.
  • வைரலான வீடியோ.
'வேணாம்..விட்டுடு..': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வெச்சி செஞ்ச எருமை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.சிங்கம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அதனுடைய வலிமைக்கும் கூர்மையான புத்திக்கும் முன்னால் மாபெரும் விலங்குகள் கூட சரணடைகின்றன. அதனை எதிர்கொள்ளும் தைரியத்தை பொதுவாக வேறு எந்த மிருகத்தாலும் திரட்ட முடியாது. காட்டில், சிங்கம் முழு சுதந்திரத்துடன் உலா வருகிறது. எந்த மிருகத்தை வேண்டுமானாலும் அது தனது இரையாக ஆக்கிக் கொள்கிறது. இருப்பினும், சில விலங்குகளை கண்டால் சிங்கத்துக்கும் சிறு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அப்படிபட்ட ஒரு மிருகம் செய்த ஒரு ஆச்சரியமான செய்கை ஒன்றின் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தால், சிங்கத்துக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படுமா என ஆச்சரியம் எழுகிறது. இந்த வீடியோ சிங்கம் மற்றும் காட்டு எருமை தொடர்பானது. சிங்கத்தை பார்த்ததுமே எருமை அதன் மீது பாய்கிறது. 

சிங்கத்தை சிதறடித்த எருமை

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் காட்டில் எருமை மாடு ஒன்று அமர்ந்திருப்பதை காண முடிகிறது. அப்போது தூரத்தில் இருந்து வரும் சிங்கத்தின் பார்வை அதன் மீது படுகிறது. அதை பலியாக்கும் நோக்கத்துடன் முன்னேறி சிங்கம் எருமையைத் தாக்குகிறது. ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. மற்றொரு எருமை அங்கு வருகிறது. சிங்கத்தை நோக்கி ஓடி வரும் அந்த எருமை, அதன் மீது கோபத்தோடு பாய்கிறது. பின் தனது கொம்புகளால் அதை மீண்டும் மீண்டும் மேலே தூக்கி வீசுகிறது. சிங்கத்திற்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தான் வேட்டையாட வந்த இடத்தில் தன்னையே வேட்டையாடும் எருமையை அதனால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. 

மேலும் படிக்க | 'போன் வேணும்...' அடம் பிடிக்கும் குட்டி, அடக்கும் அம்மா குரங்கு: கியூட் வைரல் வீடியோ 

சிங்கிளா சிக்கிய சிங்கத்தின் வீடியோவை இங்கே காணலாம்: 

தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிய காட்டு ராஜா 

சிங்கம் காட்டுக்கு ராஜா!! ஆனால், சிங்கத்தின் கர்வத்தை இந்த எருமை நீக்கியதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. பலத்த அடிபட்ட சிங்கம் அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறது. இந்த வீடியோவை africanwildlife1 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. சிங்கத்தின் வலிமையையும் தைரியத்தையும் இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க | இதுதான் உண்மையான 'கேட் வாக்'... மாடல்களுக்கே சவால் விடும் பூனை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News