சிங்கத்தை நடுங்க வைக்கும் காட்டுப்பன்றி - வைரல் வீடியோ

சிங்கத்தை நடுங்க வைத்த காட்டுப்பன்றியின் வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 20, 2022, 12:04 PM IST
  • சிங்கத்தை எதிர்க்கும் காட்டுப்பன்றி
  • டிவிட்டரில் வைரலாகும் வீடியோ
  • மிரட்டலுக்கு பயந்து ஓடும் சிங்கம்
சிங்கத்தை நடுங்க வைக்கும் காட்டுப்பன்றி - வைரல் வீடியோ title=

உருவத்தில் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் சிங்கம் காட்டுக்கு ராஜா. பழங்காலம் முதலே சிங்கம் மட்டுமே பலம் பொருந்திய விலங்காக புனைவுக் கதைகள், நாவல்கள் என எல்லாவற்றிலும் அடையாளம் காட்டப்படுகிறது. அதற்கு காரணம் மிடுக்கான தோற்றம், கம்பீரமான நடை, கர்ஜணையெல்லாம் அடிகோடு இடப்படுகின்றன. மக்களும் இதனை ஆராயாமல் அப்படியே நம்பிக்கொண்டிருக்கின்றனர். விலங்குகள் ஆய்வாளர்கள் சொல்வதைப் பார்த்தால் கதை வேறாக இருக்கிறது. வேட்டை முதல் ஓட்டம் வரை என புலி தான் ராஜா என்கிறார்கள். நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும், இந்த வீடியோ அதனை உண்மை என நிரூப்பிக்கிறது.

மேலும் படிக்க | வண்ணத்துப்பூச்சியை துரத்தும் பென்குயின்கள்; இணையவாசிகளை கவர்ந்த வைரல் வீடியோ

வேட்டையாட வந்த சிறுத்தையை ஒற்றை ஆளாக எதிர்கிறது காட்டுப் பன்றி. சிங்கமும் ஒற்றையாகயாக தான் வந்திருக்கிறது. ஆனால், உருவத்தை வைத்து எடைபோடக் கூடாது என்பதற்கு இந்த வீடியோ உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். கொல்ல வந்த சிங்கத்தை தன்னிடம் இருக்கும் தைரியத்தால் நெஞ்சுரத்தோடு எதிர்கிறது காட்டுப்பன்றி.

ஒரே ஒரு உறுமலில் தாக்க வந்த சிறுத்தைக்கு பயத்தைக் காட்டுகிறது. சிங்கமும் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறது. தாக்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அப்படியொரு எண்ணம் இருந்தால் விட்டுவிடு என்கிற ரீதியில் முறைக்கிறது காட்டுப் பன்றி. கம்பீரமும் நெஞ்சுரமும் காட்டுப் பன்றியிடம் தான் இருக்கிறது. பதுங்கி அடிக்கலாம் என்பதற்காக சிங்கம் இருக்கிறது என பேச்சுக்காக சொல்லலாம். ஆனால், அதன் நடவடிக்கையில் அப்படியான அறிகுறி எதுவும் தெரியவில்லை. காட்டுப்பன்றியின் மிரட்டலுக்கு பயந்த சிங்கம், பின்வாங்கியதுடன் ஓடியும் விடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | மீன்களுக்கு உணவளிக்கும் சிம்பன்சி: கொஞ்சித் தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News