நேரலை செய்தி ஒளிப்பரப்பின் போது பெண் நிருபரை முத்தமிட்ட ரஷ்ய நபர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்!
ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிரபல செய்தி நிலையம், Deutsche Welle. இந்த செய்தி ஊடகத்தில் பயிணாற்றும் பெண் நிருபர் ஒருவரை பார்வையாளர் ஒருவர் பலவந்தமாக முத்தமிட்ட காட்சி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஷ்யாவில் FIFA 2018 போட்டிகள் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டிகளின் தகவல்களை அனைத்து செய்தி ஊடகங்களும் நேரடியாக ஒளிப்பரப்பி வருகின்ற.
அந்த வகையில் கடந்த ஜூன் 14 அன்று நடைப்பெற்ற போட்டியினை குறித்து சம்பந்தப்பட்ட செய்தி ஊடகம் நேரடி தகவல்களை ஒளிப்பரப்பி வந்தது. இந்நிலையில் நேரடி தகவலை வழங்கிவந்த நிருபரினை அருகில் இருந்த பார்வையாளர் ஒருவர் வந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டதுடன் அவருடன் தகாத முறையில் நடந்துள்ளார்.
எனினும் நேரடி ஒளிப்பரப்பின் போது இதுகுறித்து எந்த சலனம் காட்டாத நிருபர், பின்னர் தனது இன்ஸ்டாகிராம் தனது அதிரிப்பிதியினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... "மரியாதைகுறியவர்களே, மற்ற தொழிலை போர் ஊடக தொழிலும் மேன்மை மிக்கது தான். பிற துறைகளை மதிப்பதைப் போல் ஊடக துறைக்கும் அங்கிகாரம் அளியுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.