ஆசையாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த பிறகு, தன்னுடைய மணமகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றுவிட்டால், அந்த மணமகனின் மன நிலை எப்படி இருக்கும்? சோகத்தின் உச்சிக்கு போய்விடுவார்!! ஆனால், இங்கு ஒருவர் இப்படிபட்ட சூழலை வேறுவிதமாக கையாண்டுள்ளார்.
தன் வருங்கால மனைவி திருமணம் வேண்டாம் என சொல்லிவிட்டு சென்ற பிறகு, மனச்சோர்வடைவதற்குப் பதிலாக, பிரேசிலில் (Brazil) ஒருவர் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றை செய்துள்ளார். ஆம்!! அவர் தன்னைத் தானே மணந்துகொண்டார்!! சுய அன்பின் வெளிப்பாடாக அவர் தன்னையே திருமணம் செய்து கொண்டார்!
குறிப்பிடத்தக்க வகையில், டியோகோ ரபேலோ மற்றும் விட்டர் புவெனோ ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் செய்து 2020 செப்டம்பரில் ஒரு ஆடம்பரமான திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர். இருப்பினும், மன வேறுபாடுகள் மற்றும் தொடர்ச்சியான வாதங்கள் காரணமாக இந்த ஜோடி ஜூலை மாதத்தில் பிரிந்தது. திருமண தேதி வந்ததும், 33 வயதான இஹாகேர், பஹியாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தன்னைத்தானே மணந்து கொண்டார். இந்த தனித்துவமான திருமணத்தில் (Marriage) அவரது நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 17 அன்று திருமணம் நடந்தாலும், ஒரு கண்ணாடியைப் பார்த்து, ‘உன்னை மணக்க எனக்கு சம்மதம்’ என கூறும் வீடியோ இப்போதுதான் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
"இன்று என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும், ஏனெனில் நான் இந்த வாழ்க்கையில் மிகவும் நேசிக்கும் நபர்களுடன் இன்று நான் இருக்கிறேன். ஒரு சோகமான நிகழ்வை ஒரு சந்தோஷமான தருணமாக மாற்றி அதை நான் என் அன்பானவர்களுடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறேன்” என்று டியோகோ கூறினார்.
"நான் ஒரு மாதத்திற்கு என் நிலைமையை ஆராய்ந்தேன். என்னைப் பாராட்டிக்கொள்ளவும் நேசிக்கவும் நான்தான் எனக்கு தேவைப்படுகிறேன் என்று முடிவு செய்தேன். ஆகையால் இந்த திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்தேன். நான் அழைத்த 50 விருந்தினர்களில் 40 பேர் வந்தார்கள்” என்றார் அவர்.
ALSO READ: சாலையைக் கடக்க உதவும் காகம்! அதிசயமான வைரல் வீடியோ
“என்னுடைய இந்த திருமணத்தின் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவனாக யாருக்கும் எந்த செய்தியையும் அனுப்ப விரும்பவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு திருமணம் தேவையில்லை. கண்டிப்பாக நான் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், நான் குழந்தைகளைப் பெற விரும்புகிறேன், ஆனால் என் மகிழ்ச்சி அதைப் பொறுத்து மட்டுமே இருக்க முடியாது” என்று டியோகோ மேலும் கூறினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR