பாம்பாட்டியை பதற வைத்த ராஜநாகம் - வைரல் வீடியோ

ராஜநாகத்தை பிடித்த பாம்பாட்டி, நூலிழையில் தப்பும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 3, 2023, 02:59 PM IST
பாம்பாட்டியை பதற வைத்த ராஜநாகம் - வைரல் வீடியோ

நாகப்பாம்பு இனங்களில் மிகவும் வீரியம் வாய்ந்த இனமாக இருப்பது ராஜநாகம். இதனுடைய விஷய் மிகவும் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்தது என்றாலும், மருத்துவ உலகில் மருத்து உப பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த பாம்புவை அசால்டாக கையாண்டால், மேலோகம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அத்தகைய குணாதிசயம் கொண்ட பாம்பை பாம்பாட்டி ஒருவர் பிடித்துக் கொண்டு வித்தைக் காட்டும் வீடியோ வைரலாகியுள்ளது. அவர் தைரியமாக அதை செய்தாலும், பாம்பு திடீரென அவரை பதம்பார்க்க முற்படுகிறது. இந்த நேரத்தில் சற்று உசாராக அவர் இருந்ததால் பாம்பின் தாக்குதலில் இருந்து தப்பித்தார்.

மேலும் படிக்க | என்னமா இது..மாணவிகள் உல்லாச நடனம்...செம்ம காமெடி வைரல் வீடியோ

இன்ஸ்டாகிராமில் ஜியோ வைல்டு என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது இந்த வீடியோ. பாம்பாட்டியாக இருப்பவர் இளைஞர் தான். அவருக்கு பாம்பு பிடித்து நல்ல அனுபவம் இருக்கிறது என்பதை வீடியோவை பார்க்கும்போது தெரிந்து கொள்ளலாம். ராஜநாகத்தையே அசால்டாக பிடித்து அதனை வித்தை காட்ட முயற்சிக்கிறார். இருந்தாலும், ராஜநாகம் அவரை ஒருமுறை கொத்த முயற்சிக்கிறது. நொடியில் பதறிப்போகும் அந்த பாம்பாட்டி ராஜநாகத்தின் வாலைப் பிடித்து தாக்குதலில் இருந்து தப்பிக்கிறார். அவர் பயப்படுவதை பார்க்கும்போதே அந்த ராஜநாகம் விஷம் கொண்ட பாம்பு போல் தெரிகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by GEO_WILD (@_geowild)

இந்த வீடியோவை பார்க்கும் பார்வையாளர்களுக்கே பாம்பின் உருவம் திகைப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு நீளம் இருக்கிறது. வீடியோ ஏதோ ஆப்பிரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டது போல் தெரிந்தாலும், உறுதியாக எந்த இடம் மற்றும் எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கான தகவல் இல்லை. பாம்பிடம் பாம்பாட்டி பதறும் இந்த வீடியோ பார்ப்பதற்கு சாகசம் போல் தெரிந்தாலும், அனுபவம் இல்லாமல் செய்பவர்கள் நிச்சயம் ஆபத்தை எதிகொள்ள வேண்டியிருக்கும். மேலும், அனுபவசாலிகள் எப்படி சாதுர்யமாக செயல்பட்டு பாம்பிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதையும் இங்கே புரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | Romance Video: இவ்வளவு லவ்வை எங்க ஒளிச்சு வச்சிருந்த? காதல் பரவசத்தில் சிங்கப் பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News