டெல்லி நடுரோட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு; வைரலாகும் Video!

வடகிழக்கு டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை 56 வயதான நபர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டார். இந்த சம்பவம் அருகில் இருந்த CCTV காமிராவில் பதிவாகியுள்ளது!

Updated: Sep 27, 2019, 01:36 PM IST
டெல்லி நடுரோட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு; வைரலாகும் Video!
Pic Courtesy: twitter/@ANI

வடகிழக்கு டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை 56 வயதான நபர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டார். இந்த சம்பவம் அருகில் இருந்த CCTV காமிராவில் பதிவாகியுள்ளது!

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலின் போது மர்ம நபர் அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து ஹசன் தற்போது பட்பர்கஞ்சில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "காயமடைந்தவர் உடனடியாக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருந்து பட்பர்கஞ்ச் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைப்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் CCTV-யிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது, இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர், பைக்கில் சென்ற ஹசனையும் அவரது நண்பரையும் துரத்தியதைக் காட்டுகிறது. மேலும் ஹசனை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓடுவதற்கு முன்பு துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ளார். 

காவல்துறை விசாரணையில் ஹாசன் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரே கிராம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.