Viral Wave: கல்யாண ஏற்பாடுகளை காலி செய்த கடலலை

Washed Out Destination Wedding Plan: கல்யாணத்தின் மீது காதல் கொண்டு, அதை காற்று வாங்க கடற்கரையில் நடத்தச் சென்ற மணமக்களுக்கு நேர்ந்த சோகமான சம்பவம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2022, 01:40 PM IST
  • திருமணத்தை புரட்டிப்போட்ட கடல் அலை
  • கடலலையால் குலைந்து போன திருமண ஏற்பாடு
  • கல்யாணத்தை நிறுத்துமா கடலலை?
Viral Wave: கல்யாண ஏற்பாடுகளை காலி செய்த கடலலை  title=

வைரல் வீடியோ: திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் வாழ்க்கை ஒப்பந்தம் என்றாலும், அதை பலரும் பலவிதமாக செய்துக் கொள்கின்றனர். பாரம்பரிய திருமணம் வரை, பதிவுத் திருமணம் என காலத்திற்கு ஏற்றாற்போல கல்யாணம் செய்துக் கொள்ளும் முறைகள் மாறுகின்றன. செல்வந்தர்களுக்கு செலவு பிடிக்கும் திருமணம் என்றால், ஏழைகள், தங்களுக்கு ஏற்றவாறு எளிமையாக திருமணம் செய்துக் கொள்கின்றனர். தற்போது டெஸ்டினேஷன் வெட்டிங் எனப்படும் வழக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

விமானத்தில் திருமணம், ஹெலிகாப்டரில் கல்யாணம், கடற்கரையில் திருமணம், பூங்காவில் கல்யாணம் என்ற விருப்பத்திற்கேற்றாற்போல திருமணம் செய்து கொள்ளும் முறை மாறிக் கொண்டே இருக்கிறது. பணமும், ஆடம்பரமுமே திருமணத்திற்கான இடத்தை முடிவு பண்ணும் காலம் இது என்ற நிலையில் இன்றைய காலகட்டம் உள்ளது.

மேலும் படிக்க | இது ஒரு அழகிய மழைக்காலம்: இணையவாசிகளை ஏங்க வைத்த வைரல் வீடியோ

லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஏற்பாடு செய்த திருமணத்தின் அனைத்து ஏற்பாடுகளும் சீர்குலைந்து போனால், எப்படி இருக்கும்? அதிர்ச்சியாக இருக்கிறதா? உண்மை தான். நம்பாவிட்டால் இந்த வைரல் வீடியோ உங்களுக்கு உண்மையைச் சொல்லும். 

அமெரிக்காவில் ஹவாய் தீவில் உள்ள ஒரு பகுதியில் டில்லியன் , ரிலே மர்ஃபி என்ற ஜோடியின் திருமணம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற இருந்தது. இதற்காக கடற்கரையோரமாக ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | வாக்கிங் செல்லாமல் ஸ்கேட்டிங் சென்று டபாய்க்கும் தாத்தா: வீடியோ வைரல்

திருமண நிகழ்வு தொடங்குவதற்கு சற்று முன்னர் திடீரென எழுந்த கடலலை ஒன்று அனைவரையும் அதிர்ச்சையடைச் செய்தது. ஆழிப் பேரலையோ என்று அஞ்சச் செய்த அந்த நீரலை, திருமணம் நடைபெற இருந்த இடத்தை தனது வளைக்குள் கொண்டுவந்தது.

பேரலையால் குளித்த திருமண இடம் முழுவதிலும் செய்யப்பட்டிருந்த திருமண ஏற்பாடுகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. கரைக்கு அப்பால் இருந்து வந்த அலை, கரையோரத்தில் செய்யப்பட்டிருந்த திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் அடித்து துவம்சம் செய்துவிட்டது. இந்த வைரல் கடலலையைக் கண்டு திருமணத்துக்கு வந்த விருந்தாளிகள் அனைவரும் வாயடைத்துப்போய் விட்டனர்.

ஆனால் நல்ல காலமாக அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தையும் தலைகீழாய் புரட்டிப்போட்ட கடலலை, மனிதர்கள் யாருக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை என்ற நிம்மதி மட்டுமே எஞ்சியது. ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லப்படும் திருமணத்தை செய்து கொள்ளும் சில நிமிடங்களுக்கு முன்பே அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு கடலலையால் ஏற்பட்ட அதிர்ச்சி சற்று நேரத்தில் வடிந்துவிட்டது.

மேலும் படிக்க | வாக்கிங் செல்லாமல் ஸ்கேட்டிங் சென்று டபாய்க்கும் தாத்தா: வீடியோ வைரல்

வீடியோவை பார்த்த அனைவரும் குரங்கின் சேட்டையையும், அமைதியாக ராட்ச கொம்புடன் இருக்கும் வெள்ளாட்டையும் வெகுவாக ரசித்துள்ளனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News