'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் என்று முடிவு வந்துள்ளது.
அதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கமல்ஹாசனுடன் தனது அடுத்த தமிழ் திரைப்பட பணிகளை விரைவில் தொடங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். 'விக்ரம்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் டீஸர் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.
Also Read | விஜயின் மாஸ்டர் படத்தின் டெலிடட் காட்சிகளுக்கு அதிரடியான வரவேற்பு!
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திங்களன்று, கொரோனா வைரஸ் நோய் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 29, 2021
தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்தத் தகவலை லோகேஷ் எழுதினார், "அனைவருக்கும் வணக்கம். நான் செய்துக் கொண்ட கொரோனா வைரஸ் பரிசோதனையி, எனக்கு கோவிட் -19 பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நான் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தகவலை சொல்கிறேன். எனக்கு நல்ல கவனிப்பு இருக்கிறது. விரைவில் திரும்பி வருவேன்” என்று எழுதியுள்ளார்.
Also Read | Kajal Aggarwal வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்: காஜலுக்கு twin sister உள்ளாரா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR