விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார் மேத்திவ் ஹைடன்!

பிரபல கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹைடன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்!

Updated: Oct 8, 2018, 10:53 AM IST
விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார் மேத்திவ் ஹைடன்!

பிரபல கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹைடன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்!

ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் பிரபல மட்டையாளர மேத்திவ் ஹைடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார். சாலை விபத்தில் சிக்கிய அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நெற்றியில் தேய்மானம், கழுத்தில் முறிவு எனும் உயிருக்கு ஆபத்து இல்லாத பிரச்சனைகளுடன் தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து தனது புகைப்படங்களுடன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில்... "Fractured C6, torn C5, C4 ligaments safe to say I truly have dodged a bullet," என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என உறுதியாகியுள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Took on Straddie back bank yesterday with @josh_hayden28 and lost!!! Game over for a few d 

A post shared by Matthew Hayden (@haydos359) on

46-வயது ஆகும் மேத்திவ் கடந்த 2009-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்த ஓய்வு பெற்றார். 103-டெஸ்ட் 161-ஒருநாள் மற்றும் 9-டி20 பேட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ள இவர் விரைவில் குனமடைய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.