கொல்கத்தாவில் இருந்து சுமார் 600 கிமி தொலைவில் உள்ள ஜல்பாய்குரி என்னும் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்றிடம் இருந்து வனத்துறை அதிகாரி ஒருவர் நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேற்குறிப்பிட்ட கிராமத்தில் சுமார் 18 அடி நீளம், 40 கிலோ எடைக்கொண்ட மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திரிவதாக தகவலக் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து வன்துறை அதிகாரி சஞ்சய் தட் என்பவர் கிராமத்திற்கு விரைந்து கடும் முயற்சியில் மலைப்பாம்பினை பிடித்தார்.
#WATCH Narrow escape for Sanjoy Dutta, Range Officer of Baikunthapur Forest in Jalpaiguri after a python he rescued from a village almost strangled him to death while he was posing for selfies with locals. #WestBengal pic.twitter.com/KroJHOCOkk
— ANI (@ANI) June 18, 2018
கூடியிருந்த மக்கள் அவரை பாராட்டு மழையில் நனைத்தனர், அதேவேலையில் இந்த சம்பவத்தினை அனைத்து ஊடகங்களும் படம்பிடிக்க சம்பவயிடத்திற்கு விரைந்துவிட்டனர். அத்தருனத்தில் ஊடகங்களுக்கு போஸ் கொடுக்க தான் பிடித்த பாம்பினை தன் கழத்தினை சுற்றி வைத்து காட்டினார் சஞ்சய். ஆனால் திடீரென அவரது கழுத்தில் இருந்த பாம்பு அவரின் கழுத்தை நெரிக்க முற்பட்டது. இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவரை பாம்பிடம் இருந்து காப்பாற்றினர்.
இந்த நிகழ்வானது அங்கிருந்த பொதுமக்களால் வீடியோவாக பதியப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.