பிரபல ஆபாச வலைதளத்தில் மிகவும் தேடப்பட்டு வந்த நகராக வலம் வந்த மியா கலீஃபா, இந்த ஆண்டு தனது இடத்தினை இழந்துள்ளார்!
குறித்த அந்த ஆபாச பட வலைதளத்தில், இந்த ஆண்டு மியா கலீஃபாவை விட மிகவும் அதிகமாக தேடப்பட்ட நடிகை என்ற பட்டத்தினை அவரது சக நடிகர் தட்டி சென்றுள்ளார்.
முன்னாள் அடல்ட் திரைப்பட நட்சத்திரம் மியா கலீஃபா, தனது ஓரளவு சுருக்கமான தொழில்முறை வாழ்க்கையில் ஆபாச வலைதளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக தனது பெயரினை முதல் இடத்தில் தக்க வைத்திருந்த அவர் தற்போது தனது இடத்தினை சக நடிகருக்கு விட்டு கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான அந்த ஆபாச வலைதள வருடாந்திர “மறுஆய்வு ஆண்டு அறிக்கை” படி, “அதிகம் தேடப்பட்டவர்கள்” விருதுகள் 2019-ஆம் ஆண்டில் லானா ரோட்ஸுக்குச் சென்றது. இவரைத்தொடர்ந்து மியா கலீஃபா மற்றும் ரிலே ரீட் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
பெண்களால் பெரும்பாலும் தேடப்பட்ட நடிகர் லானா என்றும் வலைத்தளம் குறிப்பிடுகிறது, மேலும் 2018 உடன் ஒப்பிடும்போது பெண் பார்வையாளர்களின் விகிதம் இரண்டு சதவீத புள்ளிகள் அதிகரித்து மொத்தம் 32 சதவீதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் மூன்று பெரிய தேடல்கள் "அமெட்சுர்", "ஏலியன்" மற்றும் "பிஓவி" என்றும் குறித்த அந்த ஆபாச வலைதளம் தெரிவித்துள்ளது...
ஆபாச திரைப்படங்களின் மூலம் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்களின் முக்கியமானவர் மியா கலீஃபா. அதிலும் குறிப்பாக அவர் இஜாப் அணிந்துக்கொண்டு பாலியல் காட்சியில் நடித்ததாக அவருக்கு பல பயங்கரவாத அமைப்புகளில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்னர், மியா கலிப்பா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் ஆபாச திரைப்பட தொழிலில் மூன்று மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் எனவும், இந்த தொழிலின் மூலம் தான் சம்பாதித்த பணம் சொற்ப அளவே எனவும் மனம் திறந்தார். இருப்பினும் இவர் 2018-ஆம் ஆண்டில் ஆபாச வலைதளங்களில் அதிகம் தேடப்பட்ட அடல்ட் நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.