சமீபத்தில் இணையத்தை புயலாய் தாக்கிய வீடியோ ஒன்றில், ஒரு செய்தி வாசிப்பாளர் தனது அன்றாட புல்லட்டின் போது இனிமையான குறுக்கீட்டைப் பெற்றுள்ளார்.
கர்ட்னி குபே என்று பெயரிடப்பட்ட நிருபர் தொலைக்காட்சியில் நேரலையில் செய்திகளை வாசித்துக்கொண்டிருக்க, அவரது அபிமான மகன் செய்தி அறைக்குள் நுழைந்து தனது அம்மாவின் கையை இழுக்க ஆரம்பிக்கிறார். செய்தி வாசிப்பாளரோ, தன் மகனை சமாளிக்க இயலாமல், செய்தி குழுவின் உதவியை நாடுகின்றார். இந்த சம்பவமானது தற்போது இணையத்தில் வீடியோவாக பரவி வைரலாகி வருகிறது.
வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டு, சேனலின் அதிகாரப்பூர்வ பக்கம், “நீங்கள் முக்கிய செய்திகளை மக்களுக்கு வழங்கும் போது, சில நேரங்களில் எதிர்பாராத முக்கிய செய்திகள் நிகழ்கின்றன.” என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளது.
Sometimes unexpected breaking news happens while you're reporting breaking news. #MSNBCMoms #workingmoms pic.twitter.com/PGUrbtQtT6
— MSNBC (@MSNBC) October 9, 2019
இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் பலரும், வேலை செய்யும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த செய்தி நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்து வருவதோடு, குறும்பு குழந்தையின் செயல்பாடை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வு குறித்து ட்விட்டர் பயனாலர் குறிப்பிடுகையில்., "வேலை செய்யும் போது தனது குழந்தைகளைச் சுற்றி அனுமதிக்க அவள் அனுமதிக்கப்படுவது மிகவும் அருமை என்று நான் நினைக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் "இது ஒரு நேரடி செய்தி ஒளிபரப்பில் நான் கண்ட மிக அற்புதமான விஷயம். இதைச் செய்ய முடியும் என்பதைக் காட்டி, அதை கருணையுடனும் நகைச்சுவையுடனும் கையாண்டதற்கு நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.