தடைகளை தாண்டி வெளியானது The Accidental Prime Minister!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் 'The Accidental Prime Minister' திரைப்படத்தின் தமிழ் trailer வெளியானது!

Updated: Jan 11, 2019, 10:52 AM IST
தடைகளை தாண்டி வெளியானது The Accidental Prime Minister!
Screengrab

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் 'The Accidental Prime Minister' திரைப்படத்தின் தமிழ் trailer வெளியானது!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன் மோகன் சிங் அவர்களின் வாழ்க்கை படமானது, பாலிவுட் முன்னணி நடிகர் அனுப்பம் கெர் நடிப்பில் உருவாகி இந்தி மொழியில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு வரும் ஜனவரி 18-ஆம் நாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி எழுத்தாளர் சஞ்சய் பரு எழுதிய புத்தகம் 'The Accidental Prime Minister'. இந்த புத்தக்கதினை மையப்படுத்தி அறிமுக இயக்குநர் விஜய் ரத்னகர் கொவ்டே அதே தலைப்பில் படம் ஒன்றினை உருவாக்கியுள்ளார். 

இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே, இத்திரைப்படத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்த ட்ரைலருக்கான வரவேற்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் இளைஞர் அணியினர் இத்திரைப்படம் திரையிடலுக்கு முன்னர் தங்களுக்கு திரையிடப்படவேண்டும் என படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகள் இருக்கும் பட்சத்தில் அதனை நீக்கி திரைப்படத்தினை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 'The Accidental Prime Minister' திரைப்படம் மன்மோகன் சிங் புகழுக்கு கலங்கம் விலைவிக்கும் வகையில் உருவாகி இருப்பதாக கூறி பிகாரைச் சேர்ந்த சுதிர் குமார் என்பவர், இப்படத்தில் நடித்த அனுபம் கெர் மற்றும் படக்குழுவினர் 13 பேர் மீது வழக்கு தொடுத்தார். இத்துனை தடைகளையும் மீறி இப்படம் இன்று இந்தியில் வெளியாகியுள்ளது. விரைவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.