தொட்டது குத்தமாடா, கணவனை வெச்சி செஞ்ச மனைவி; வீடியோ வைரல்

Funny Bride Beating Groom Video: கோபமடைந்த மணமகள் மணமகனை அடி வெளுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 9, 2022, 10:56 AM IST
  • மணமகனால் கடுப்பாகிய மணமகள்.
  • வைரலான வீடியோ.
  • கணவனை வெச்சி செஞ்ச மனைவி.
தொட்டது குத்தமாடா, கணவனை வெச்சி செஞ்ச மனைவி; வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன.

திருமணம் நடக்கும் இடத்தில் சூழல் பல வித உணர்வுகளால் நிறைந்திருக்கும். திருமணங்களில் மணமகன் அல்லது மணமகளின் தோழிகள் தோழர்கள், மணமக்களின் சகோதர சகோதரிகள் என பலர் கிண்ட கேலிகளில் ஈடுபடுவதுண்டு. தற்போது இங்கு மணமக்களின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | 'ஆரம்பமே இப்படியா?' சொதப்பிய மணமகன், கடுப்பான மணமகள்: வைரல் வீடியோ

வீடியோவில், மணமகள் கோபத்துடன் மணமகனை நோக்கி கையை நீட்டுகிறார், அதன் பிறகு அவர் அவரது செயலை எதிர்த்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டு இருவரும் மோதிக் கொள்கின்றனர். அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் பயனில்லை. இந்த சண்டைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பந்தலில் அமர்ந்திருந்த மணமகன் மீது மணப்பெண் தாக்கல்
மணமகனும், மணமகளும் மணிமண்டபத்தில் அமர்ந்திருப்பதையும், திடீரென மணமகள் எதற்கோ கோபமடைந்து, மணமகனை தாக்குவதை இந்த வைரலான வீடியோவில் காணலாம். வீடியோவை பலமுறை பார்த்த பிறகு, இது ஏதோ ஒரு சடங்கு என்று புரியும், இதில் மணமகள் மணமகனின் முகத்தில் எதையோ வைக்கப் போனார்.

மணமகள் மணமகனை நோக்கி கையை நீட்டியவுடன், மணமகன் அவரது கையை அகற்றி, பின்னர் அவரது நோக்கி கையை நீட்டினார், அதில் மணமகளும் அவரைத் தடுத்தார். சில நொடிகளில் மணமகனும், மணமகளும் கைகலப்பைத் தொடங்கினர். மணமகள் சண்டைக்கு மத்தியில் மண்டபத்தை விட்டு வெளியே விழுகிறார்.

பின்னால் அமர்ந்திருந்த உறவினர்கள் சிரித்துக் கொண்டே இருந்தனர்
மறுபுறம், பின்னால் அமர்ந்திருந்த உறவினர்கள் முதலில் சிரிப்பதை காணலாம், ஆனால் பின்னர் அவர்களும் இந்த சடங்கை நிறுத்த முயன்றனர். இந்த வீடியோவைப் பார்த்ததும் மணமக்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது போல் தெரிகிறது. 

திருமணத்தில் நடந்த வேடிக்கையை இந்த வீடியோவில் காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

திருமணம் தொடர்பான இந்த வித்தியாசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது kaunhainyehlog என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | மனைவியின் ஓவர் பாசம், சிக்கி சின்னாபின்னமான கணவன்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News