அம்மாடியோ! இவ்வளோ பெருசா? புல்டோசருடன் சண்டையிடும் மலைப்பாம்பு!

மனிதனின் படைப்பை விட இயற்கையின் படைப்பு சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

Written by - RK Spark | Last Updated : Jan 4, 2023, 06:58 AM IST
  • காட்டில் புல்டோசருடன் சண்டையிடும் மலைப்பாம்பு.
  • ஆகாசமாக சீண்டுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
அம்மாடியோ! இவ்வளோ பெருசா? புல்டோசருடன் சண்டையிடும் மலைப்பாம்பு! title=

இயற்கை படைத்த அத்தனை விஷயங்களும் நம்மை பிரமிக்க வைக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது.  சிறிய புழு, பூச்சிகள் தொடங்கி பெரிய மனிதர்கள் மட்டுமல்லாது பல காட்சிகளும் நம்மை வியக்கவைக்கிறது.  இயற்கையின் படைப்புகளை பார்க்கும்போது எவ்வளவு வியப்பாக இருக்கிறதோ அதைவிட அதிகமாக அவை செய்யும் செயல்களையும் நடந்து கொள்ளும் விதத்தையும் பார்க்கையில் நமக்கு கூடுதல் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.  அதேபோல மனிதர்களின் படைப்புகளும் பல சமயங்களில் நமக்கு உதவியாகவும், நம்மை வியக்கவைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.  இருப்பினும் இயற்கையின் படைப்பு மனிதரின் படைப்பை மிஞ்சிவிடுவதை நாம் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாது.

மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?

அப்படியொரு விஷயம் தான் இங்கு நடந்திருக்கிறது, அதாவது மனிதனின் படைப்பை விட இயற்கையின் படைப்பு சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.  அந்த வைரல் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு காடு போன்ற பகுதி தெரிகிறது, அங்கு மண் தரையில் சுமார் 15 ஆதி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை காண முடிகிறது.  அதற்கு பக்கத்திலேயே ஒரு புல்டோசர் நிற்பதையும் பார்க்க முடிகிறது, இந்த வீடியோவை முழுமையாக பார்க்கும்போது தான் நமக்கு தெரிகிறது அந்த பாம்பை விரட்ட தான் புல்டோசர் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

அந்த மலைப்பாம்பை தூக்கியதும் அது சீறிக்கொண்டு வாயை பிளக்கும் காட்சி நமது உடலை சிலிர்க்க வைக்கிறது.  எவ்வளவு முயன்றும் அந்த பாம்பை அகற்றமுடியாமல் போராடி, ஒருவழியாக அந்த பாம்பை புல்டோசரை பயன்படுத்தி தூக்கியதும் பாம்பு தனது முழு உடலையும் விரித்து கொண்டு நிற்கிறது.  சில நிமிடம் பாம்பு அடங்கிப் போய்விடாமல் எதிர்த்து கொண்டு நிற்கும் காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறது.

மேலும் படிக்க | ‘மாமா.. என்ன ஏமாத்திட்டீங்களே!’: திருமணத்தில் வந்த காதலி, முழித்த மணமகன், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News