விமானத்தில் இஸ்ரோ தலைவர் சிவனை வரவேற்ற சக பயணிகள் - Watch!

இஸ்ரோ தலைவர் சிவனை விமானத்தில் சக பயணிகள் கைதட்டி வரவேற்றக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது!

Updated: Oct 6, 2019, 01:36 PM IST
விமானத்தில் இஸ்ரோ தலைவர் சிவனை வரவேற்ற சக பயணிகள் - Watch!

இஸ்ரோ தலைவர் சிவனை விமானத்தில் சக பயணிகள் கைதட்டி வரவேற்றக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது!

இஸ்ரோவின் தலைவரான சிவன் தலைமையிலான குழு இந்தியாவிற்காக சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் அனுப்புவதற்கு மிகப்பெரிய அளவில் உழைத்ததை இந்த நாடே பார்த்தது. இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் இண்டிகோ விமானத்தின் எகானமி கிளாஸில் பயணித்தார். அவரை அந்த விமானத்தில் பார்த்த விமானப்பணிப் பெண்கள் அவர் விமானத்திற்குள் நுழைந்ததும் அவரிடம் பேசி, கைகொடுத்து, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். 

அதன் பின் விமானப் பணிப்பெண் ஒருவர் அந்த விமானத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் பயணிக்கவிருப்பதை சக பயணிகளுக்கு மைக் மூலம் தெரியப்படுத்தினார். அந்த பின்பு விமானத்திலிருந்தவர்கள் அவருக்கு கை தட்டி உற்சாகமாக வரவேற்றனர். இந்த சம்பவங்களை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ட்வீட்டரில் வெளியான இந்த பதிவிற்குப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் சிலவற்றைக் கீழே காணுங்கள். அவர் நினைத்தால் பிஸ்னஸ் கிளாஸ் அல்லது பிரைவேட் ஜெட் விமானத்தில் கூட பறக்க வாய்ப்புகள் உள்ள போது தேவையில்லாமல் செலவு செய்யாமல் விமானத்தில் எகானமி கிளாஸில் பயணித்த இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.