மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் பதிவு செய்துள்ளார்.
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி(வயது 89) காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி ஆகஸ்ட் 10-ம் தேதி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மக்களவை சபாநாயகராக இருந்தார். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, அவர் பதவி விலகவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
10 முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் மிக அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. கடந்த மாதம் திடீரென பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இந்நிலையில் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி சாட்டர்ஜி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் பதிவு செய்துள்ளார். அதில், சக்திமிக்க அரசியல்வாதியான சோம்நாத் மக்களவையில் நிலை நாட்டினார். ஏழைகளுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் குரல் கொடுத்தவர் அவர். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Former MP and Speaker Shri Somnath Chatterjee was a stalwart of Indian politics. He made our Parliamentary democracy richer and was a strong voice for the well-being of the poor and vulnerable. Anguished by his demise. My thoughts are with his family and supporters.
— Narendra Modi (@narendramodi) August 13, 2018