பூஜா ஹெக்டே நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. ரசிகர்கள் காட்டம்!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரை உருவ கேலி செய்யும் விதமாக நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதால் சமந்தா ரசிகர்கள் தற்போது

Updated: May 29, 2020, 01:23 PM IST
பூஜா ஹெக்டே நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. ரசிகர்கள் காட்டம்!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரை உருவ கேலி செய்யும் விதமாக நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதால் சமந்தா ரசிகர்கள் தற்போது
கொந்தளித்துள்ளனர். 

சமந்தா அக்கினேனி குறித்து பூஜா ஹெக்டே தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டுமென்ற சமந்தாவின் ரசிகர்களின் கோரிக்கை சரியல்ல என்று தங்கள் கனவுக் கன்னி பூஜா ஹெக்டேவை பாதுகாக்க அவரது  ரசிகர்கள் களம் இறங்கிவிட்டனர்.

பூஜா ஹெக்டே மற்றும் சமந்தா அக்கினேனி இருவரும் இன்று ட்விட்டரில் சூப்பர் டூப்பர் வைரலாகிறார்கள். உள்ளனர். இன்ஸ்டாகிராம் பூஜா வெளியிட்ட கருத்துக்கு பிறகு இரு நடிகைகளின் ரசிகர்கள் தங்கள் தலைவிக்கு ஆதரவாக கருத்து யுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.   இன்ஸ்ட்ராகிராமில் சமந்தா அக்கினேனியின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில்  'இவர் எனக்கு  அழகாகத் தெரியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து சமந்தாவின் ரசிகர் பட்டாளத்தை சீண்டியது.   பூஜா ஹெக்டே சமந்தா பற்றிக் கூறிய தவறான கருத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் இன்ஸ்ட்ராகிராம் கணக்கில் பல்வேறு பதிவுகளை எழுதிக் குவித்தார்கள்.. சமந்தா  ஒரு மூத்த கலைஞர் என்றும், பூஜாவை விட அதிக ஸ்டைலானவர், நன்றாக நடிப்பவர் என்றும், பூஜா தனது அவமதிப்பான வார்த்தைகளுக்கு மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் சமந்தாவின் சமூக ஊடக்க் கணக்குகளில் பதிவுகள் வந்து குவிந்தன.       

 சமந்தா அழகாக இல்லை என்று பதிவிட்ட சிறிந்து நேரத்திலேயே தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அவரது டிஜிட்டல் குழு அதை சரிப்படுத்தி விட்டதாகவும் கொண்டிருப்பதாகவும்  பூஜா ஹெக்டே தனது  ட்விட்டர் பக்கத்தில் எழுதினார்.  

"எனது இன்ஸ்டாகிராம் கணக்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இப்போது நான் முயன்றுக் கொண்டிருக்கிறேன்.  உடனடியாக களத்தில் இறங்கி உதவும் எனது தொழில்நுட்ப குழுவுக்கு நன்றி. இறுதியாக, எனது எனது இன்ஸ்டாகிராம் கணக்கை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டேன்.  கடந்த  சில மணி நேரங்களுக்கு முன்பு எனது இன்ஸ்ட்ராகிராம் கணக்கில் இருந்து பகிரப்பட்ட மற்றும் இயக்கப்பட்ட அனைத்து தகவல்களும் நீக்கப்படுகின்றன” என்று  பூஜா தனது டிவிட்டரில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் சமந்தா அக்கினேனியின் ரசிகர்கள், பூஜா வெளியிட்ட கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகே அவர் இவ்வாறு தெரிவிப்பதாகக் கூறி ட்ரோல் செய்தனர்

தீயில் நெய்யை விடுவதுபோல,  சமந்தா அக்கினேனி மற்றும் அவரது நண்பர்கள் நந்தினி ரெட்டி மற்றும் சின்மய் ஸ்ரீபாதா ஆகியோருக்கு இடையிலான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இருவரும் கிண்டல் செய்வதைக் காணலாம். அந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் இதோ...  

நீக்கப்பட்ட பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவில் சமந்தா குறித்த கருத்தும் நீக்கப்பட்டு இருந்தது. அதை ட்ரோல் செய்யும் சமந்தாவின் ரசிகர்கள், இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சில மணி நேரத்தில், உடனடியாக எப்படி சரியாகும் என்று கேலி செய்கின்றனர். இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #PoojaMustApologizeSamantha என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட்டாகி வருகிறது.

- மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்.