கையில் தாலி! ரசிகர்களுக்கு விளக்கம் அளித்த பிரியங்கா!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார்.

Last Updated : May 1, 2018, 02:50 PM IST
கையில் தாலி! ரசிகர்களுக்கு விளக்கம் அளித்த பிரியங்கா! title=

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார்.

சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அசாம் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது தனி விமானத்தில் பயணம் செய்த அவர் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் கையில் தாலி இருந்ததால் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்ற பேச்சு கிளம்பியது. 

 

 

இதையடுத்து இந்த செய்து குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டரில் ரசிகர்களுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார். அதில் அவர், தான் கையில் கட்டியிருந்தது திருஷ்டி கழிக்கும் பாசி, தாலி இல்லை என்றும் தனக்கு திருமணம் நடந்தால் அது ரகசியமாக நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

Trending News