சன்னி லியோன்-க்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலம்!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆனார். 

Updated: Mar 7, 2018, 06:50 PM IST
சன்னி லியோன்-க்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலம்!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆனார். 

இதுகுறித்த தகவலினை சன்னி-டேனியல் தம்பதியினர் தங்களது குழந்தை புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துக்கொண்டனர். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பாலிவுட்டின் அதிகபிரசங்கி என அழைக்கப்படும் ராக்கி சாவத், சன்னி லியோன் குழந்தைகள் குறித்து கருத்தது தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது...

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இதையடுத்து, தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் இரண்டு நாட்கள் முன்னதாக (மார்ச் 5) அறிவித்துள்ளனர். இந்த அழகிய குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என பெயர் சூட்டியுள்ளதாவும் கூறியுள்ளனர்.

நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பதிவில், “திருமண வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்பதை நானும் டேனியல் வெபரும் ஜூன் 21-ம் தேதிதான் தெரிந்துகொண்டாம்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.