காற்றில் பறந்து பந்தை பிடிக்கும் ரோகித் சர்மா; வைரல் Video!

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது பவுண்டரி கயிறுகளுக்கு அருகே பரபரப்பான கேட்சை எடுத்த இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா ஆக்லாந்து கூட்டத்தை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்!

Updated: Jan 24, 2020, 02:28 PM IST
காற்றில் பறந்து பந்தை பிடிக்கும் ரோகித் சர்மா; வைரல் Video!

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது பவுண்டரி கயிறுகளுக்கு அருகே பரபரப்பான கேட்சை எடுத்த இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா ஆக்லாந்து கூட்டத்தை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்!

முதலில் பேட்டிங் கேட்கப்பட்ட பின்னர், நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் குப்டில் மற்றும் கொலின் மன்ரோ ஒரு விறுவிறுப்பான தொடக்கத்திற்கு இறங்கினர். 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த குப்தில், பகுதிநேர பந்து வீச்சாளர் சிவம் தூபே-வின் முதல் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார்.

எனினும் இந்த தருணத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது மார்ட்டின் குப்டிலோ, சிவம் தூபேவோ அல்ல. இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ரோகித் சர்மா தான். மார்ட்டின் குப்டில் அடித்த பந்தினை பவுண்டரி கயிறுகளுக்கு மிக அருகே நின்று காற்றில் பறந்து பிடித்து அவரை வெளியேற்றினார். இந்த தருணத்தினை கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது மிகவும் விரும்பி பகிர்ந்து வருகின்றனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று அக்குலாண்ட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக கோலின் முன்றோ 59(42) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக கேன் வில்லியம்சன் 51(26), ரோஸ் டைலர் 54(27) ரன்கள் குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 203 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த இந்திய அணி வீரர்கள் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் ஜாஸ்பிரித் பூம்ரா, சர்துல் தாக்கூர், யுசுவேந்திர சாஹல், சிவம் தூபே மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது.