ரொனால்டோவிற்கே டஃப் கொடுக்கும் சேவல்! வைரலாகும் வீடியோ!

சேவல் ஒன்று பந்தை வைத்து அழகாக ஃபுட்பால் விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2022, 07:52 PM IST
  • கால்பந்து விளையாடும் சேவல்.
  • அழகாக பாலை தட்டி விளையாடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
ரொனால்டோவிற்கே டஃப் கொடுக்கும் சேவல்! வைரலாகும் வீடியோ! title=

பெரும்பாலும் சேவற்கோழிகள் சண்டைபோடும் காட்சிகளை பார்த்திருப்போம், அவை அழகாகவும், திறமையாகவும் விளையாடும் காட்சிகளை பார்ப்பது அரிது தான்.  சேவல் என்றதுமே இதுவரை முதலில் நமக்கு நியாபகம் வருவது சண்டை தான், ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்த்தால் சேவலின் சாகசம் தான் முதலில் நினைவுக்கு வரும்.  சேவல் ஒன்று மனிதர்களை போல புட்பால் விளையாடும் காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | மணமகளின் தங்கைக்கு மாலை போட்ட மாப்பிள்ளை: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ 

யோக் என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் அந்த வைரல் வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் சேவல் ஒன்று, ஒரு பெரிய பணத்துடன் நின்றுகொண்டு இருக்கிறது.  அந்த சேவல் தன் தலையால் பந்தை முட்டி மேலே தூக்குகிறது, பின்னர் பறந்து பறந்து பந்தை உயர அடிக்கிறது.  அதனையடுத்து பந்தை உருட்டிக்கொண்டும், வேகமாக அடித்துக்கொண்டும் மனிதர்கள் விளையாடுவது போல சுறுசுறுப்பாக விளையாடுகிறது.  பின்னர் ஒரு பந்தை வைத்து விளையாடிக்கொண்டே ஒரு சந்து பக்கம் செல்கிறது.

 

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சேவலின் திறமையை பாராட்டும் வகையில் கமெண்டுகளையும், லைக்குகளையும் போட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மாலை வேண்டாம் என சீன் போட்ட மணமகள், கியூட்டா சமாளிச்ச மணமகன்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News