ரவிவர்மா பெயின்டிங் போல் சமந்தா... வைரலாகும் போட்டோ

ரவிவர்மாவின் அழகிய பெயின்டிங் போல எடுக்கப்பட்டுள்ள நடிகை சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Feb 4, 2020, 10:08 AM IST
ரவிவர்மா பெயின்டிங் போல் சமந்தா... வைரலாகும் போட்டோ

ரவிவர்மாவின் அழகிய பெயின்டிங் போல எடுக்கப்பட்டுள்ள நடிகை சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சென்னையைச் சேர்ந்த இவர் 2010ஆம் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் படிப்படியாக முன்னேறி இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் அவர் பிசியாக இருக்கிறார். இப்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்த படத்தில் த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஜானு என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இவர், புகழ்பெற்ற ரவிவர்மாவின் ஓவியங்களை போல எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் கலந்துகொண்டார். பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம், லிமிடெட் எடிசன் காலண்டருக்காக இதை எடுத்துள்ளார். இதில் நடிகை சமந்தாவை அவர் எடுத்துள்ள புகைப்படம் அப்படியே அச்சு அசலாக ஓவியம் போலவே இருக்கிறது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Always the best working with you @venketramg ... recreating Ravi varmas work for NAAM. So glad I could be a part of this meaningful project .. Thankyou @suhasinihasan ...#naamct #gvenketram #gvenketramphotography M&H @sadhnasingh1 @koduruamarnath

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

 

More Stories

Trending News